ஐபிஎல் 15வது சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் வெற்றி பல தலைமுறைகள் கடந்தும் பேசப்படும் என்று அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். 

ஐபிஎல் 15வது சீசனில் புதிதாக களமிறங்கிய ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி அறிமுக சீசனிலேயே கோப்பையை வென்றது. 

ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியில் அனைத்துவீரர்களும் சிறப்பாக ஆடி, ஒரு அணியாக சேர்ந்து சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வென்றது குஜராத் டைட்டன்ஸ் அணி. கேப்டன்சி அனுபவம் இல்லாத ஹர்திக் பாண்டியா கேப்டன்சி செய்த முதல் சீசனிலேயே குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை வென்றது.

ஷுப்மன் கில், சஹா, பாண்டியா, டேவிட்மில்லர், ராகுல் டெவாட்டியா, ஷமி, யஷ் தயால், ரஷீத் கான் என ஒவ்வொரு வீரரும் ஒவ்வொரு போட்டியை குஜராத்துக்கு ஜெயித்து கொடுத்திருக்கின்றனர்.

அந்த அணியின் அனைத்து வீரர்களும் ஒரு அணியாக இணைந்து ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியில், பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ராவின் வழிகாட்டுதலில் கோப்பையை வென்று சாதனை படைத்தது.

அறிமுக ஐபிஎல் சீசனிலேயே கோப்பையை வென்றது குறித்து பேசிய குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா, இந்த சீசனில் டைட்டிலை வென்றது எங்களுக்கு ஸ்பெஷலானது. ஏனெனில் இந்த வெற்றி ஒரு மரபை உருவாக்கியிருக்கிறது. முதல் சீசனிலேயே சாம்பியன் பட்டம் வென்றது மிகவும் ஸ்பெஷல்.இந்த வெற்றி தலைமுறைகள் கடந்தும் பேசப்படும் என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்தார்.