மும்பை வெற்றி, செம்ம குஷி மோடில் ஹரே கிருஷ்ணா, ஹரே ராமா பாடல் பாடிய ஹர்திக் அண்ட் குர்ணல் பாண்டியா!

ஹர்திக் பாண்டியா மற்றும் குர்ணல் பாண்டியா இருவரும் இணைந்து ஹரே கிருஷ்ணா, ஹரே ராமா பாடல் பாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Hardik Pandya and Krunal Pandya Sing a Hare Krishna Hare Rama Song ahead of Upcoming MI vs RCB  and LSG vs DC, watch video here rsk

ஐபிஎல் 2024 கிரிக்கெட் திருவிழா தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வாங்கப்பட்ட ஹர்திக் பாண்டியா அந்த அணியின் கேப்டனாக பொறுப்பேற்று விளையாடி வருகிறார். இவரது தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் விளையாடிய முதல் 3 போட்டிகளில் தோல்வியை தழுவியது. அதுமட்டுமின்றி மோசமான சாதனைகளையும் தனதாக்கியது. இதைத் தொடர்ந்து ஹர்திக் பாண்டியா குஜராத்தில் உள்ள சோம்நாத் கோவிலில் அபிஷேகம் ஆராதனைகள் செய்து வழிபாடு செய்தார்.

இதையடுத்து மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக நடந்த 20ஆது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 234 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் கடைசி ஓவரை எதிர்கொண்ட ரொமாரியோ ஷெப்பர்ட் அந்த ஓவரில் 32 ரன்கள் எடுத்தது திருப்பு முனையை ஏற்படுத்தியது. பின்னர் விளையாடிய டெல்லி கேபிடல்ஸ் கடைசியில் 205 ரன்கள் எடுத்து 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலமாக மும்பை இந்தியன்ஸ் இந்த சீசனில் முதல் வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலிருந்து 8ஆவது இடத்திற்கு முன்னேறியது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து வரும் 11 ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியும் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த நிலையில் தான் டெல்லி அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு குஜராத்தில் வதோதராவில் உள்ள தனது வீட்டிற்கு சென்ற ஹர்திக் பாண்டியா அங்கு பஜனைக்கு ஏற்பாடு செய்துள்ளார். அப்போது தனது சகோதரர் குர்ணல் பாண்டியாவுடன் இணைந்து ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என்ற பஜனை பாடலை பாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குர்ணல் பாண்டியா லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். கடந்த 7ஆம் தேதி நடந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான 21ஆவது ஐபிஎல் போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ 163 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய குஜராத் 130 ரன்கள் மட்டுமே எடுத்து 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில், குர்ணல் பாண்டியா 4 ஓவர்கள் வீசி 11 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios