லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா துணிச்சலாக பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் உள்ள லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. புனேவில் நடக்கும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி பிளே ஆஃபிற்கு முன்னேறிவிடும். இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதுவரை ஆடியதில் சேஸிங் செய்த 6 போட்டிகளில் 5 வெற்றிகளை குஜராத் அணி பெற்றபோதிலும், முதல் பேட்டிங்கிலும் நன்றாக செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்த போட்டிக்கான குஜராத் டைட்டன்ஸ் அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வெளிநாட்டு ஃபாஸ்ட் பவுலர் லாக்கி ஃபெர்குசனுக்கு பதிலாக, டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் - விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் சாய் சுதர்சன் மற்றும் பிரதீப் சங்வான் ஆகியோருக்கு பதிலாக சாய் கிஷோர் மற்றும் யஷ் தயால் ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குஜராத் டைட்டன்ஸ் அணி:
ரிதிமான் சஹா (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், மேத்யூ வேட், ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், சாய் கிஷோர், அல்ஸாரி ஜோசஃப், யஷ் தயால், முகமது ஷமி.
லக்னோ அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரவி பிஷ்னோய்க்கு பதிலாக கரன் ஷர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:
குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), கேஎல் ராகுல் (கேப்டன்), தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், க்ருணல் பாண்டியா, ஆயுஷ் பதோனி, ஜேசன் ஹோல்டர், துஷ்மந்தா சமீரா, கரன் ஷர்மா, ஆவேஷ் கான், மோசின் கான்.
