Asianet News TamilAsianet News Tamil

GT vs RR: எந்த அணி ஃபைனலில் ஜெயித்து கோப்பையை வெல்லும்..? க்ரேம் ஸ்மித், ஹைடனின் கணிப்பு

ஐபிஎல் 15வது சீசனின் ஃபைனலில் எந்த அணி வெற்றி பெற்று கோப்பையை வெல்லும் என்று க்ரேம் ஸ்மித், மேத்யூ ஹைடன்  ஆகியோர் கணித்துள்ளனர். 
 

graeme smith and matthew hayden predict the title winner of ipl 2022
Author
Ahmedabad, First Published May 29, 2022, 5:34 PM IST

ஐபிஎல் 15வது சீசன் இன்றுடன் முடிவடைகிறது. இறுதிப்போட்டி இன்று அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கிறது. இந்த சீசனில் ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிதாக களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.

சமபலம் வாய்ந்த இரு அணிகளும் கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்குகின்றன. இரு அணிகளுமே பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டிலும் சமபலம் வாய்ந்த அணிகள் என்பதால் போட்டி கடுமையாக இருக்கும்.

இந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய 2 முறையும் குஜராத் அணிதான் வெற்றி பெற்றது. லீக் சுற்றில் 37 ரன்கள் வித்தியாசத்திலும், முதல் தகுதிப்போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் குஜராத் அணி வெற்றி பெற்றது. ராஜஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடியபோது மற்றும் இலக்கை விரட்டியபோதும் என இரண்டு முறையும் குஜராத் அணி வெற்றி பெற்றது.

எனவே ராஜஸ்தான் மீதான ஆதிக்கத்தை மீண்டும் செலுத்தி ஃபைனலிலும் வெற்றி பெறும் முனைப்பில் குஜராத் அணியும், ஏற்கனவே வாங்கிய 2 அடிக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் ராஜஸ்தான் அணியும் களமிறங்குகின்றன.

இந்நிலையில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்று கருத்து கூறியுள்ள ராஜஸ்தான் அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட்டருமான க்ரேம் ஸ்மித், ராஜஸ்தான் ராயல்ஸுக்கே அதிக வாய்ப்புள்ளது. ராஜஸ்தான் அணி ஏற்கனவே(2வது தகுதிப்போட்டி) இந்த மைதானத்தில் (அகமதாபாத்) ஆடியிருக்கிறது என்பதால், அந்த பிட்ச், அவுட்ஃபீல்டு ஆகியவற்றை பற்றி ராஜஸ்தானுக்கு நன்றாக தெரியும். இரு அணிகளிலும் மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள். இதுமாதிரியான முக்கியமான போட்டியில் பெரிய வீரர்கள் நன்றாக ஆடவேண்டும் என்று ஸ்மித் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய மேத்யூ ஹைடன், அகமதாபாத் பவுன்ஸி பிட்ச் ஆஸ்திரேலிய பிட்ச்களை போன்றது. எனவே இது குஜராத் டைட்டன்ஸுக்கு சாதகமாக இருக்கும் என்று ஹைடன் கூறியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios