Asianet News TamilAsianet News Tamil

உலக கோப்பை ஃபைனலில் இந்த 2 அணிகளும் மோதினால் செமயா இருக்கும்!! கோப்பையை அந்த அணிதான் வெல்லும்.. கில்லெஸ்பி அதிரடி

ஒவ்வொரு அணியுமே வலுவாக திகழும் நிலையில், பல முன்னாள் வீரர்களும் உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியை கணித்து தங்களது கருத்தை தெரிவித்துவருகின்றனர்.
 

gillespie picks his favourites for worlc cup 2019 title winner
Author
Australia, First Published Apr 10, 2019, 2:38 PM IST

உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி ஆகிய இரு அணிகளில் ஒன்றுதான் உலக கோப்பையை வெல்லும் என பெரும்பாலான முன்னாள் வீரர்கள் கணித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் ஆக்ரோஷமாக ஆடிவருகிறது. அந்த அணியில் கப்டில், வில்லியம்சன், டெய்லர், லதாம், கிராண்ட் ஹோம் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். எனவே அந்த அணியும் உலக கோப்பையில் கடும் சவாலான அணியாக திகழும். 

gillespie picks his favourites for worlc cup 2019 title winner

ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் கடந்த ஓராண்டாக திணறிவந்த ஆஸ்திரேலிய அணி, இந்திய மண்ணில் இந்திய அணியையும் அதன்பின்னர் பாகிஸ்தான் அணியையும் வீழ்த்தி புது உத்வேகத்துடன் காணப்படுகிறது. ஸ்மித் - வார்னர் இல்லாமலேயே அந்த அணி இந்திய அணியை வீழ்த்திவிட்டது. உஸ்மான் கவாஜா, ஆடம் ஸாம்பா, பாட் கம்மின்ஸ் ஆகியோர் நல்ல ஃபார்மில் அருமையாக ஆடிவருகின்றனர். ஸ்மித்தும் வார்னரும் திரும்பிவிட்டதால் உலக கோப்பையில் ஆஸ்திரேலிய அணி மிரட்டும். அதுமட்டுமல்லாமல் உலக கோப்பைக்கு அந்த அணியின் துணை பயிற்சியாளராக 2 உலக கோப்பையை வென்ற முன்னாள் கேப்டன் பாண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார். 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, உலக கோப்பையை வெல்லும் உத்தியை அறிந்த அணி. எனவே உலக கோப்பையில் ஆஸ்திரேலிய அணியும் கடும் சவாலளிக்கும். 

gillespie picks his favourites for worlc cup 2019 title winner

இதற்கிடையே, வெஸ்ட் இண்டீஸ் அணியும் அபாரமாக ஆடிவருகிறது. கெய்ல், ஷாய் ஹோப், ஹெட்மயர், பிராத்வெயிட், ஹோல்டர் என அந்த அணியும் வலுவாக திகழ்கிறது. இவை தவிர தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகளும் சிறந்த அணிகள்தான். யாரும் கண்டுகொள்ளாத ஆஃப்கானிஸ்தான் அணி சிறந்த கிரிக்கெட்டை ஆடிவருவதால் அந்த அணியை குறைத்து மதிப்பிட முடியாது. கண்டிப்பாக மிகப்பெரிய அணிகளுக்கு எல்லாம் ஆஃப்கானிஸ்தான் அணி கடும் சவாலாக திகழும். ஆசிய கோப்பையில் கூட இந்திய அணிக்கு கடும் சவாலாக திகழ்ந்தது. கடைசியில் இந்திய அணியால் போட்டியை டிரா செய்ய முடிந்ததே தவிர வெல்ல முடியவில்லை. அதனால் ஆஃப்கானிஸ்தான் அணியையும் எளிதாக எடைபோட்டு விட முடியாது. 

இவ்வாறு ஒவ்வொரு அணியுமே வலுவாக திகழும் நிலையில், பல முன்னாள் வீரர்களும் உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியை கணித்து தங்களது கருத்தை தெரிவித்துவருகின்றனர்.

gillespie picks his favourites for worlc cup 2019 title winner

அந்த வகையில், உலக கோப்பை குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் கில்லெஸ்பி, இங்கிலாந்து மண்ணில் உலக கோப்பையை அந்த அணிதான் வெல்லும் என்று பலரும் தெரிவிக்கின்றனர். அவர்கள் ஒருநாள் போட்டிகளில் அபாரமாக ஆடிவருகின்றனர். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலுமே ஆக்ரோஷமாக செயல்பட்டுவருகின்றனர். தனிப்பட்ட முறையில் சுயநலமாக சொல்கிறேன், இறுதி போட்டியில் இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும் மோதினால் நன்றாக இருக்கும்.

உலக கோப்பையை வெல்லும் உத்தியும் நுணுக்கங்களும் ஆஸ்திரேலிய அணிக்கு தெரியும் என்பது அனைத்து அணிகளுக்கும் தெரியும். ஆஸ்திரேலிய அணிதான் கோப்பையை வெல்லும் என்று யாரும் சொல்லாமல் இருக்கலாம். ஆனால் என்னை பொறுத்தமட்டில் ஆஸ்திரேலிய அணிதான் கோப்பையை வெல்லும் என்று நினைக்கிறேன் என்று அதிரடியாக தெரிவித்தார் கில்லெஸ்பி.
 

Follow Us:
Download App:
  • android
  • ios