Asianet News TamilAsianet News Tamil

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர்..! முன்னாள் ஜாம்பவானின் பரிந்துரை

டி20 உலக கோப்பையில் ரோஹித்துடன் கேப்டன் விராட் கோலி தான் தொடக்க வீரராக இறங்க வேண்டும் என்று கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
 

gavaskar opines virat kohli open with rohit sharma for india in t20 world cup
Author
Chennai, First Published Sep 12, 2021, 10:10 PM IST

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்கவுள்ள நிலையில், விராட் கோலி தலைமையிலான 15 வீரர்களை கொண்ட இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது.

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணை கேப்டன்), கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), இஷன் கிஷன்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்ஸர் படேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி.

ஸ்டாண்ட்பை வீரர்கள் - ஷ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர்.

இந்நிலையில், டி20 உலக கோப்பையில் ரோஹித் சர்மாவுடன் கேப்டன் விராட் கோலியே தொடக்க வீரராக இறங்க வேண்டும் என்று கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். கோலி தொடக்க வீரராக இறங்கினால், இந்திய அணிக்கு நல்ல தொடக்கம் கிடைப்பது உறுதி. அதுமட்டுமல்லாது அவர் தொடக்க வீரராக இறங்குவதன் மூலம், 3ம் வரிசையில் சூர்யகுமார் 3ம் வரிசையில் இறங்கமுடியும்.

ராகுல் 4ம் வரிசையில் ஆடலாம் என்று தெரிவித்துள்ள கவாஸ்கர், ஆட்டத்தின் சூழலை பொறுத்து ராகுல் - ரிஷப் பண்ட் - ஹர்திக் பாண்டியா ஆகிய மூவரில் ஒருவர் 4ம் வரிசையில் ஆடலாம் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios