இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் எந்த 11 பேரை இந்திய அணி களமிறக்கலாம் என்று கம்பீர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணி 4 டெஸ்ட், ஐந்து டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் ஆடுவதற்காக இந்தியாவிற்கு வந்துள்ளது. முதல் 2 டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடக்கவுள்ளது. முதல் போட்டி நாளை(பிப்ரவரி 5) சென்னையில் தொடங்குகிறது. அந்த போட்டியில் எந்த 11 வீரர்களை இந்திய அணி களமிறக்கலாம் என்று கம்பீர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவரையும் தொடக்க வீரர்களாக தேர்வு செய்துள்ளார் கம்பீர். மயன்க் அகர்வாலை தேர்வு செய்யவில்லை. புஜாரா, கோலி, ரஹானே நிரந்தர தேர்வு. விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட்டையும், ஸ்பின்னர்களாக அஷ்வின், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ் ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளார் கம்பீர்.

ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ரா மற்றும் ஆஸி., சுற்றுப்பயணத்தில் அசத்திய முகமது சிராஜ் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். சீனியர் பவுலர் இஷாந்த் சர்மாவை எடுக்கவில்லை கம்பீர்.
முதல் டெஸ்ட் போட்டிக்கு கம்பீர் தேர்வு செய்த இந்திய அணி:
ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி(கேப்டன்), அஜிங்க்யா ரஹானே(துணை கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், அஷ்வின், குல்தீப் யாதவ், பும்ரா, முகமது சிராஜ்.
