Asianet News TamilAsianet News Tamil

அவரோட பெரிய ரசிகன் நான்.. தாதாவையே தன்வசப்படுத்திய இந்திய வீரர் இவரா..?

இந்த உலக கோப்பையில் ஆடும் இந்திய அணியின் மிகப்பெரிய பலமே பவுலிங் யூனிட் தான். முன்னெப்போதும் இல்லாத வகையில், மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டுடன் இந்திய அணி ஆட உள்ளது.

ganguly says he is the big fan of bhuvneshwar kumar
Author
England, First Published May 27, 2019, 3:40 PM IST

உலக கோப்பைக்கு இன்னும் ஓரிரு தினங்களே உள்ள நிலையில், போட்டிகளை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். 

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள பிரதான அணியாக இந்திய அணி பார்க்கப்படுகிறது. இந்த உலக கோப்பையில் ஆடும் இந்திய அணியின் மிகப்பெரிய பலமே பவுலிங் யூனிட் தான். முன்னெப்போதும் இல்லாத வகையில், மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டுடன் இந்திய அணி ஆடுகிறது. குல்தீப் - சாஹல் ரிஸ்ட் ஸ்பின் ஜோடியும் அபாரமாக பந்துவீசிவருகிறது. 

உலகின் நம்பர் 1 பவுலராக இருக்கும் பும்ரா தான் இந்திய அணிக்கும் எதிரணிக்கும் இடையேயான பெரிய வித்தியாசமாக அமையப்போகிறார். தொடக்கத்திலும் சரி, டெத் ஓவர்களிலும் சரி எதிரணிகளின் பேட்ஸ்மேன்கள் மீது முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தி அவர்களை ரன் சேர்க்கவிடாமல் தடுத்து நெருக்கடியை உருவாக்கி பின்னர் விக்கெட்டுகளை வீழ்த்துகிறார். அவரது பவுலிங் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. 

ganguly says he is the big fan of bhuvneshwar kumar

பும்ராவும் புவனேஷ்வர் குமாரும் சிறந்த ஃபாஸ்ட் பவுலிங் ஜோடியாக திகழ்ந்தது. ஆனால் அண்மைக்காலமாக புவனேஷ்வர் குமார் சரியாக பந்துவீசாத நிலையில், ஷமி அபாரமாக வீசிவருகிறார். 3வது ஃபாஸ்ட் பவுலிங் ஆப்சனாக ஹர்திக் பாண்டியா இருப்பார் என்பதால் இரண்டு ஃபாஸ்ட் பவுலர்களுடன் இந்திய அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஷமி கடந்த ஓராண்டாக அபாரமாக வீசிவரும் அதேவேளையில் புவனேஷ்வர் குமார் ஓராண்டாகவே பெரியளவில் வீசவில்லை. நல்ல வேகமும் கிடைக்காமல் சிரமப்படுகிறார். ஆனால் புவனேஷ்வர் குமார் நல்ல ஸ்விங் பவுலர். எனினும் ஐபிஎல் உட்பட கடந்த ஓராண்டாகவே பெரியளவில் சோபிக்கவில்லை. 

எனவே உலக கோப்பையில் ஆடும் லெவனில் புவனேஷ்வர் குமார் தேவையில்லை. பும்ராவுடன் இரண்டாவது ஃபாஸ்ட் பவுலராக ஷமியை எடுக்கலாம் என சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து தெரிவித்திருந்தார். 

ganguly says he is the big fan of bhuvneshwar kumar

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கேப்டன் கங்குலியும் ஷமியையே தேர்வு செய்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள கங்குலி, என்னுடைய தேர்வு ஷமி தான். புவனேஷ்வர் குமார் அல்ல. புவனேஷ்வர் குமார் கடந்த 4-5 மாதங்களாக ஃபார்மில் இல்லாததால் சரியாக வீசவில்லை. ஆனால் புவனேஷ்வர் குமாரின் நிதானம் மற்றும் அணுகுமுறைக்கு நான் மிகப்பெரிய ரசிகன். விரைவில் அவர் மீண்டும் அதிக வலிமையுடன் ஃபார்முக்கு திரும்புவார் என கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios