இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி அண்மையில் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். 

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணலை, கபில் தேவ், கெய்க்வாட் மற்றும் சாந்தா ஆகிய மூவர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக்குழு நடத்தியது. ரவி சாஸ்திரி, மைக் ஹெசன், டாம் மூடி, ராபின் சிங், ராஜ்பூட் ஆகிய ஐவரிடமும் நேர்காணல் நடத்தப்பட்டது. 

அதில், முழுக்க முழுக்க நேர்காணலின் அடிப்படையில், ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டதாக கபில் தேவ் அறிவித்தார். சாஸ்திரிக்கும் நியூசிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெசனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியதாகவும் கபில் தேவ் தெரிவித்தார். ஆனால் கம்யூனிகேஷன் திறனில் சாஸ்திரி மேம்பட்டிருந்ததால், அதுதான் அவரது தேர்விற்கு முக்கிய காரணம் என கபில் தேவ் தெரிவித்தார். 

இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்து பேசிய கங்குலி, ரவி சாஸ்திரி மீண்டும் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மேலும் சிறப்பாக செயல்படுவார் என நம்புகிறேன். இந்தியாவை சேர்ந்தவர்களே பயிற்சியாளராக நியமிக்கப்படுவதற்கு நானும் ஆதரவுதான். ஏனெனில் கம்யூனிகேஷன் சிக்கல் இருக்காது. அதுமட்டுமல்லாமல் புரிதலும் நன்றாக இருக்கும். 2000ம் ஆண்டுகளில் இளம் வீரர்களை வளர்த்தெடுப்பதற்காக வெளிநாட்டு பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் இப்போது இந்தியாவை சேர்ந்தவர்களே பயிற்சியாளர்களாக நியமிக்கப்படுவது நல்லதுதான் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.