Asianet News TamilAsianet News Tamil

பார்க்கதானே போறீங்க தோனியோட ஆட்டத்த.. பேட்ட ரஜினி பாணியில் ”தல”க்கு ஆதரவாக வரிந்துகட்டிய தாதா

தோனி - கேதர் ஜாதவ் ஜோடியின் மந்தமான ஆட்டம் குறித்த அதிருப்தியை சச்சின் டெண்டுல்கரே வெளிப்படுத்தியிருந்தார். தோனியின் மந்தமான பேட்டிங்கை ரசிகர்களும் விமர்சித்தனர்.
 

ganguly backs dhoni after his slow batting against afghanistan
Author
England, First Published Jun 26, 2019, 2:39 PM IST

உலக கோப்பை தொடரில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி ஆடிவருகிறது. உலக கோப்பையை வெல்லும் அணியாக பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணி தொடர் தோல்விகளை தழுவிவரும் நிலையில், இந்திய அணியோ அபாரமாக ஆடிவருகிறது. 

உலக கோப்பையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்களில் ஒருவர் தோனி. கடந்த ஆண்டு முழுவதும் மோசமாக ஆடி விமர்சனங்களை சந்தித்துவந்த தோனி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ஃபார்முக்கு வந்து ஹாட்ரிக் அரைசதம் அடித்து நம்பிக்கையளித்தார். தோனியின் ஃபார்ம் இந்திய அணிக்கு நம்பிக்கையளித்தது. 

தோனி மீண்டும் ஃபார்முக்கு திரும்பியதால் உலக கோப்பையில் அடித்து நொறுக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோலவே வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் சதமடித்து அசத்தினார். ஆனால் உலக கோப்பை தொடரில் ஒரு போட்டியில் கூட சரியாக ஆடவில்லை. இதுவரை 4 இன்னிங்ஸ்களில் ஆடி வெறும் 90 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மிகவும் மந்தமாக பேட்டிங் ஆடி, 52 பந்துகளில் 28 ரன்கள் மட்டுமே அடித்தார். 

ganguly backs dhoni after his slow batting against afghanistan

தோனி - கேதர் ஜாதவ் ஜோடியின் மந்தமான ஆட்டம் குறித்த அதிருப்தியை சச்சின் டெண்டுல்கரே வெளிப்படுத்தியிருந்தார். தோனியின் மந்தமான பேட்டிங்கை ரசிகர்களும் விமர்சித்தனர்.

தோனியின் மந்தமான ஆட்டம் குறித்து சச்சின் டெண்டுல்கர் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தோனிக்கு ஆதரவாக முன்னாள் வீரரும் முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான சந்தீப் பாட்டில் குரல் கொடுத்திருந்தார். தோனி சரியான நேரத்தில் வெகுண்டெழுவார் என நம்பிக்கையும் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், தோனிக்கு ஆதரவாக முன்னாள் கேப்டன் கங்குலியும் குரல் கொடுத்துள்ளார். தோனி குறித்து பேசியுள்ள கங்குலி, தோனி மிகச்சிறந்த பேட்ஸ்மேன். ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு போட்டியில் தானே சொதப்பினார். இந்த உலக கோப்பையில் அவர் கண்டிப்பாக தனது திறமையை மீண்டும் நிரூபிப்பார் என கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios