South Africa vs India, Centurion First Test: பிரசித் கிருஷ்ணாவை எடுத்திடாதீங்க – சுனில் கவாஸ்கர் அட்வைஸ்!
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் 11ல் பிரசித் கிருஷ்ணாவிற்குப் பதிலாக முகேஷ் குமாரை எடுக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை செஞ்சூரியன் மைதானத்தில் நடக்கிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். விராட் கோலி 18 யார்ட்கள் மட்டும் உள்ள பிட்சில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். விராட் கோலி, ரோகித் சர்மா, கேஎல் ராகுல், சுப்மன் கில் என்று நட்சத்திர வீரர்கள் பேட்டிங்கில் இருந்தாலும், பவுலிங்கில் முகமது ஷமி காயம் காரணமாக விலகியுள்ளார். இது இந்திய அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணம் ஷமிக்கு பதிலாக, பிரசித் கிருஷ்ணா அல்லது முகேஷ் குமார் ஆகியோரில் யாரேனும் ஒருவர் பிளேயிங் 11ல் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்த நிலையில் தான் இது குறித்து இந்திய அணியின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கூறியிருப்பதாவது: பிரசித் கிருஷ்ணா பவுலிங்கில் நம்பிக்கை இல்லை. இப்போது தான் காயத்திலிருந்து மீண்டு வந்திருக்கிறார். ஆதலால், அவரால் முழுமையாக பந்து வீச முடியுமா என்பது தெரியாது. இவ்வளவு ஏன், ஒருநாளை 15 முதல் 20 ஓவர்கள் வரையில் கூட பந்து வீச வேண்டிய சூழல் வரும்.
IPL 2024: ரூ. 100 கோடிக்கு வாங்கப்பட்ட ஹர்திக் பாண்டியா? ஐபிஎல் நிர்வாகம் என்ன சொல்கிறது?
அப்படியிருக்கும் சூழலில் அவரால் பந்து வீச முடியுமா என்பது கேள்வி தான். இல்லை, நான் சொல்வது தவறு என்று நிரூபித்தால் எனக்கு மகிழ்ச்சி தான். பிரசித் கிருஷ்ணா சரியாக பந்து வீசி விக்கெட்டுகள் கைப்பற்றினால், இந்திய அணிக்கு நன்மை தான். முகமது சிராஜ் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா இருவரும் மட்டுமே இந்திய அணியின் முதன்மை பந்து வீச்சாளர்கள். இவர்களது வரிசையில் தற்போது முகேஷ் குமார் இருக்கிறார். ஆதலால், பிரசித் கிருஷ்ணாவிற்கு பதிலாக முகேஷ் குமாரை பிளேயிங் 11ல் இடம் பெற செய்ய வேண்டும். நாள் முழுவதும் அவரால் பந்து வீச முடியும் என்று அவர் கூறியுள்ளார்.