Asianet News TamilAsianet News Tamil

கோலி, ரோஹித் இல்லாத இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணி..! பல முன்னாள் வீரர்களின் தேர்வு

இலங்கை சுற்றுப்பயணத்துக்கு பல முன்னாள் வீரர்கள் தேர்வு செய்த இந்திய அணியை பார்ப்போம்.
 

former indian cricketers selected team india for sri lanka series
Author
Chennai, First Published May 22, 2021, 2:41 PM IST

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஜூன் 18-22ல் இங்கிலாந்தில் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆடிவிட்டு, அப்படியே இங்கிலாந்தில் இருந்து, இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் ஆடுகிறது.

இதற்கிடையே இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. அந்த காலக்கட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்தில் இருக்கும் என்பதால், அடுத்த லெவல் இந்திய அணி இலங்கையை எதிர்கொள்கிறது. 

வெள்ளைப்பந்து ஸ்பெஷலிஸ்ட் வீரர்களான தவான், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோருடன் சூர்யகுமார் யாதவ், பிரித்வி ஷா உள்ளிட்ட வீரர்களை கொண்ட அணி இலங்கையை எதிர்கொள்ளும். இலங்கை தொடருக்கான இந்திய அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக செயல்படவுள்ளார்.

கோலி, ரோஹித் என அணியின் சீனியர் நட்சத்திர வீரர்கள் ஆடாத இலங்கை தொடருக்கான இந்திய அணியை முன்னாள் வீரர்கள் சிலர் தேர்வு செய்துள்ளனர். அந்தவகையில், ஆகாஷ் சோப்ரா, தீப்தாஸ் குப்தா, சஞ்சய் மஞ்சரேக்கர் ஆகிய முன்னாள் வீரர்கள் தேர்வு செய்த இந்திய அணியை பார்ப்போம்.

ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த இந்திய அணி:

தேவ்தத் படிக்கல், பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, க்ருணல் பாண்டியா, வருண் சக்கரவர்த்தி, யுஸ்வேந்திர சாஹல், தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார்.

தீப்தாஸ் குப்தா தேர்வு செய்த இந்திய அணி:

ஷிகர் தவான், பிரித்வி ஷா, சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, ராகுல் டெவாட்டியா, ராகுல் சாஹர், தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், டி.நடராஜன்.

சஞ்சய் மஞ்சரேக்கர் தேர்வு செய்த இந்திய அணி:

ஷிகர் தவான், பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, ராகுல் டெவாட்டியா, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், ராகுல் சாஹர், சேத்தன் சகாரியா.
 

Follow Us:
Download App:
  • android
  • ios