Asianet News TamilAsianet News Tamil

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி..! முன்னாள் வீரர்களின் அதிரடி தேர்வு

டி20 உலக கோப்பைக்கு பல முன்னாள் வீரர்கள் தேர்வு செய்த இந்திய அணியை பார்ப்போம்.
 

former cricketers and harsha bhogle pick india squad for t20 world cup
Author
Chennai, First Published Aug 18, 2021, 9:10 PM IST

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்கவுள்ளது. டி20 உலக கோப்பைக்கான முழு அட்டவணையை நேற்று வெளியிட்டது ஐசிசி.

டி20 உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணிகளாக பார்க்கப்படுகின்றன.

இதுவரை ஒரு ஐசிசி தொடரை கூட வென்றிராத இந்திய கேப்டன் விராட் கோலிக்கு இது மிகவும் முக்கியமான தொடர். இந்திய அணி கோப்பையை வெல்ல தகுந்த வலுவான அணியாக இருந்தாலும் கூட, கோப்பையை வெல்ல, சரியான அணியை தேர்வு செய்ய வேண்டியது அவசியம். 

அந்தவகையில், முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே ஆகியோர் தேர்வு செய்த இந்திய அணியை பார்ப்போம்.

சபா கரீம் கணித்துள்ள இந்திய அணி:

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், டி.நடராஜன், பும்ரா, ராகுல் சாஹர், தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார்.

ரிதீந்தர் சோதி தேர்வு செய்த டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், ஷிகர் தவான், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், பும்ரா, ஜடேஜா, ராகுல் சாஹர், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.

கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே தேர்வு செய்த டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி(கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர்/இஷான் கிஷன், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், பும்ரா, முகமது ஷமி/நடராஜன், யுஸ்வேந்திர சாஹல்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios