Asianet News TamilAsianet News Tamil

#ENGvsIND அவரை மாதிரி ஒரு ஃபைட்டர் கண்டிப்பா அணியில் தேவை.. அடுத்த மேட்ச்சில் டீம்ல எடுங்க.!

ரவிச்சந்திரன் அஷ்வின் மாதிரியான ஃபைட்டரை இந்திய அணியில் கண்டிப்பாக ஆட வேண்டும் என்றும், அதனால் இங்கிலாந்துக்கு எதிரான அடுத்த டெஸ்ட்டில் அவரை அணியில் எடுக்க வேண்டும் என்றும் முன்னாள் வீரர் ஃபரோக் எஞ்சினியர் கருத்து தெரிவித்துள்ளார்.
 

farokh engineer advises indian team should play ashwin in third test against england
Author
Headingley, First Published Aug 23, 2021, 3:49 PM IST

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி டிரா ஆன நிலையில், 2வது டெஸ்ட்டில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட்டில் இந்திய அணியின் சீனியர் ஸ்பின்னர் அஷ்வின் ஆடவில்லை. அந்த போட்டியில் அஷ்வின் ஆடாததே கடும் விமர்சனத்துக்குள்ளானது. எந்த கண்டிஷனிலும் சிறப்பாக பந்துவீசக்கூடிய சீனியர் ஸ்பின்னரான அஷ்வினை அணியில் எடுத்திருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். இந்திய அணி தேர்வையும் விமர்சித்தனர்.

எனவே 2வது டெஸ்ட்டில் அஷ்வின் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2வது டெஸ்ட்டிலும் அஷ்வின் ஆடவில்லை. மறுபடியும் 4 ஃபாஸ்ட் பவுலர்களுடன் ஆடியது இந்திய அணி. 

கண்டிஷனை கருத்தில் கொண்டுதான் 2வது டெஸ்ட்டில் அஷ்வினை எடுக்காமல் 4 ஃபாஸ்ட் பவுலர்களுடன் ஆடியதாக கேப்டன் விராட் கோலி விளக்கமளித்திருந்தார். அதுகுறித்து அஷ்வினும் தெளிவுபடுத்தினார். லண்டன் லார்ட்ஸில் 2வது டெஸ்ட் தொடங்குவதற்கு முன்பாக மழை பெய்ததால் தான், தான் ஆடவில்லை என்றும், கண்டிஷனை கருத்தில்கொண்டு 4 ஃபாஸ்ட் பவுலர்களுடன் இந்திய அணி ஆட வேண்டியிருந்ததால், தான் ஆடவில்லை என்றும் அஷ்வின் தெரிவித்திருந்தார்.

கண்டிஷனை கருத்தில்கொண்டு, 2வது டெஸ்ட்டில் அஷ்வினை அணியில் எடுக்கவில்லை என்றாலும், 3வது டெஸ்ட்டில் அவரை கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் ஃபரோக் எஞ்சினியர் கருத்து கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள ஃபரோக் எஞ்சினியர், லார்ட்ஸ் டெஸ்ட்டின்போது மேகமூட்டம் இருந்ததால் கண்டிஷனை கருத்தில்கொண்டு அஷ்வின் அணியில் எடுக்கப்படவில்லை. அது நல்ல முடிவுதான். ஆனால் ஹெடிங்லியில் நடக்கும் அடுத்த டெஸ்ட்டில் 3 ஃபாஸ்ட் பவுலர்கள் மற்றும் அஷ்வினுடன் ஆட வேண்டும். அவரை சேர்த்தால் பவுலிங்கில் அதிக வெரைட்டி கிடைக்கும். அஷ்வின் உலகத்தரம் வாய்ந்த பவுலர் மட்டுமல்லாது நல்ல பேட்ஸ்மேனும் கூட. அஷ்வின் சிறந்த ஆல்ரவுண்டர். மிகச்சிறந்த ஃபைட்டரும் கூட. அவரை மாதிரியான ஃபைட்டர் அணிக்கு கண்டிப்பாக தேவை என்று எஞ்சினியர் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios