Asianet News TamilAsianet News Tamil

#T20WorldCup வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மட்டமான ரெக்கார்டுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா இங்கி.,? டாஸ் ரிப்போர்ட்

டி20 உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

england win toss opt to field against west indies in t20 world cup super 12 match
Author
Dubai - United Arab Emirates, First Published Oct 23, 2021, 7:25 PM IST

டி20 உலக கோப்பையில் சூப்பர் 12 சுற்று போட்டிகள் இன்று முதல் தொடங்கியுள்ளன. ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா இடையே நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரை வெற்றியுடன் தொடங்கியது.

அடுத்த போட்டி இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே துபாயில் நடக்கிறது. டி20 உலக கோப்பையில் இதுவரை வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக ஒரு  போட்டியில் கூட வெற்றி பெற்றிராத இங்கிலாந்து அணி, அந்த மோசமான ரெக்கார்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்பில் இந்த போட்டியில் ஆடுகிறது.

அதுமட்டுமல்லாது, 2016 டி20 உலக கோப்பை ஃபைனலில் வெஸ்ட் இண்டீஸிடம் வாங்கிய அடிக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பிலும் இங்கிலாந்து உள்ளது.

ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணியிலோ, எவின் லூயிஸ், லெண்டல் சிம்மன்ஸ், கிறிஸ் கெய்ல், ஹெட்மயர், பூரன், பொல்லார்டு, ஆண்ட்ரே ரசல் என அதிரடி மன்னர்கள் நிறைந்துள்ளனர். இவர்களில் இருவருக்கு பேட்டில் பந்து நன்றாக சிக்கினால் எதிரணியின் கதை முடிந்தது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இங்கிலாந்து அணி:

ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), ஜேசன் ராய், டேவிட் மலான், ஒயின் மோர்கன்(கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ, லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷீத், டைமல் மில்ஸ்.

வெஸ்ட் இண்டீஸ் அணி:

எவின் லூயிஸ், லெண்டல் சிம்மன்ஸ், கிறிஸ் கெய்ல், ஷிம்ரான் ஹெட்மயர், நிகோலஸ் பூரன்(விக்கெட் கீப்பர்), கைரன் பொல்லார்டு(கேப்டன்), ஆண்ட்ரே ரசல், ட்வைன் பிராவோ, அகீல் ஹுசைன், ஒபேட் மெக்காய், ரவி ராம்பால்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios