Asianet News TamilAsianet News Tamil

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்கு கஷ்டமான டாஸ்க்!டாஸ் வென்ற இங்கிலாந்தின் அதிரடி முடிவு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

england win toss opt to field against south africa in t20 world cup
Author
Sharjah - United Arab Emirates, First Published Nov 6, 2021, 7:38 PM IST

டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. க்ரூப் 1-ல் இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக 4 வெற்றிகளை பெற்று அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், 2வது அணியாக அரையிறுதிக்கு முன்னேற ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

தலா 4 போட்டிகளில் ஆடி தலா 6 புள்ளிகளை பெற்றிருந்த ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 2 அணிகளுக்கும் கடைசி போட்டி இன்றுதான். இதில், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில், அந்த அணி நிர்ணயித்த 158 ரன்கள் என்ற இலக்கை 17வது ஓவரிலேயே அடித்து ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்று நல்ல ரன்ரேட்டுடன் 8 புள்ளிகளை பெற்றுவிட்டது.

எனவே தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்தை வீழ்த்தினால் மட்டும் போதாது. மிகப்பெரிய வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றாக வேண்டும். அனைத்து வீரர்களும் செம ஃபார்மில் அருமையாக ஆடிவரும் இங்கிலாந்துக்கு எதிராக இது தென்னாப்பிரிக்க அணிக்கு மிகக்கடினமான டாஸ்க்.

இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா இடையேயான இந்த போட்டி ஷார்ஜாவில் நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

இங்கிலாந்து அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இடது கை ஃபாஸ்ட் பவுலர் டைமர் மில்ஸுக்கு பதிலாக, வலது கை மிரட்டல் ஃபாஸ்ட் பவுலர் மார்க் உட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த டி20 உலக கோப்பையில் இந்த போட்டியில் தான் முதல் முறையாக ஆடுகிறார் மார்க் உட்.

இங்கிலாந்து அணி:

ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ஜேசன் ராய், டேவிட் மலான், ஜானி பேர்ஸ்டோ, ஒயின் மோர்கன் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷீத், மார்க் உட்.

தென்னாப்பிரிக்க அணி:

குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ரீஸா ஹென்ரிக்ஸ், ராசி வாண்டெர் டசன், டெம்பா பவுமா (கேப்டன்), எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், ட்வைன் ப்ரிட்டோரியஸ், ககிசோ ரபாடா, கேஷவ் மஹராஜ், அன்ரிக் நோர்க்யா, டப்ரைஸ் ஷாம்ஸி.
 

Follow Us:
Download App:
  • android
  • ios