Asianet News TamilAsianet News Tamil

#ENGvsPAK கடைசி ஒருநாள் போட்டி: ஒயிட்வாஷை தவிர்க்கும் முனைப்பில் பாகிஸ்தான்..! டாஸ் ரிப்போர்ட்

பாகிஸ்தானுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
 

england win toss opt to field against pakistan in last odi
Author
Birmingham, First Published Jul 13, 2021, 5:19 PM IST

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பாகிஸ்தான் அணி, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் படுமோசமாக தோற்று தொடரை இழந்தது. 2 போட்டிகளிலுமே பாகிஸ்தான் அணியின் பேட்டிங் படுமோசமாக இருந்தது. பவுலிங்கும் சொல்லும்படியாக இல்லை. ஆனால் பேட்டிங் படுமோசம்.

ஒயின் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, அந்த அணியை முற்றிலுமாக மாற்றி பென் ஸ்டோக்ஸ் தலைமையில் அனுபவமற்ற வீரர்களை கொண்ட அணியை களமிறக்கியது இங்கிலாந்து. ஆனால் அந்த இங்கிலாந்து அணியிடமே படுதோல்வி அடைந்தது.

அனுபவமற்ற இங்கிலாந்து அணியிடம் படுதோல்வி அடைந்த பாகிஸ்தான், இன்று நடக்கும் கடைசி ஒருநாள் போட்டியில் ஆறுதல் வெற்றியாவது பெறும் முனைப்பில் களமிறங்கியுள்ளது. எட்ஜ்பாஸ்டனில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

இங்கிலாந்து அணி:

ஃபில் சால்ட், டேவிட் மலான், ஜாக் க்ராவ்லி, ஜேம்ஸ் வின்ஸ், பென் ஸ்டோக்ஸ்(கேப்டன்), ஜான் சிம்ப்சன்(விக்கெட் கீப்பர்), லெவிஸ் க்ரெகோரி, க்ரைக் ஓவர்டன், ப்ரைடன் கார்ஸ், சாகிப் மஹ்மூத், மேட் பார்கின்சன்.

பாகிஸ்தான் அணி: 

இமாம் உல் ஹக், ஃபகர் ஜமான், பாபர் அசாம்(கேப்டன்), முகமது ரிஸ்வான்(விக்கெட் கீப்பர்), சௌத் ஷகீல், சொஹைப் மக்சூத், ஷதாப் கான், ஃபஹீம் அஷ்ரஃப், ஹசன் அலி, ஷாஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ரௌஃப்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios