இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆடவுள்ளது. முதல் 2 டெஸ்ட் சென்னையிலும், கடைசி 2 டெஸ்ட் அகமதாபாத்திலும் நடக்கவுள்ளது.

முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியில், பட்லர், பிராட், ஆண்டர்சன், ரோரி பர்ன்ஸ், க்ராவ்லி, ரோரி பர்ன்ஸ், டோமினிக் சிப்ளி ஆகிய டெஸ்ட் வீரர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளனர். ஸ்டோக்ஸ் மற்றும் ஆர்ச்சர் இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து ஆடிவரும் டெஸ்ட் தொடரில் ஆடவில்லை.

 முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி:

ஜோ ரூட்(கேப்டன்), ஆர்ச்சர், மொயின் அலி, ஆண்டர்சன், டோமினிக் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், பட்லர், ஜாக் க்ராவ்லி, பென் ஃபோக்ஸ், டான் லாரன்ஸ், ஜாக் லீச், டோமினிக் சிப்ளி, பென் ஸ்டோக்ஸ், ஒலி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ்.