Asianet News TamilAsianet News Tamil

#ENGvsIND கடைசி டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு..! பட்லர், ஜாக் லீச் அணியில் சேர்ப்பு

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், ஜோஸ் பட்லர் மற்றும் ஜாக் லீச் ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
 

england team announced for fifth test against india
Author
Manchester, First Published Sep 7, 2021, 6:41 PM IST

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் டிரா ஆன நிலையில், 2வது டெஸ்ட்டில் இந்திய அணியும், 3வது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்று தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. 4வது டெஸ்ட்டில் இந்திய அணி வெற்றி பெற்றதையடுத்து இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது.

தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் வரும் 10ம் தேதி மான்செஸ்டரில் தொடங்குகிறது. கடைசி டெஸ்ட்டிலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணியும், தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்துவிட்ட போதிலும் குறைந்தபட்சம் டிராவாவது செய்யும் முனைப்பில் இங்கிலாந்து அணியும் கடைசி டெஸ்ட்டில் மோதுகின்றன.

இந்நிலையில், 5வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தனக்கு 2வது குழந்தை பிறக்கவிருந்ததால் 4வது டெஸ்ட்டில் ஆடிராத ஜோஸ் பட்லருக்கு குழந்தை பிறந்துவிட்டதால், கடைசி டெஸ்ட் போட்டிக்கான அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல இந்த தொடரின் முதல் 4 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட ஆட வாய்ப்பு பெற்றிராத இடது கை ஸ்பின்னர் ஜாக் லீச் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடைசி டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி:

ஜோ ரூட்(கேப்டன்), மொயின் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோ, ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், சாம் கரன், ஹசீப் ஹமீத், டான் லாரன்ஸ், ஜாக் லீச், டேவிட் மலான், க்ரைக் ஓவர்டன், ஆலி போப், ஆலி ராபின்சன், கிறிஸ் வோக்ஸ், மார்க் உட்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios