Asianet News TamilAsianet News Tamil

#INDvsENG இங்கிலாந்து ஒருநாள் அணி அறிவிப்பு..! ரூட், ஆர்ச்சர் அணியில் இல்லை

இந்தியாவுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
 

england odi squad announced for the series against india
Author
Pune, First Published Mar 21, 2021, 5:41 PM IST

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. டெஸ்ட் தொடரை 3-1 என இந்தியாவிடம் இழந்த நிலையில், டி20 தொடரையும் இழந்தது இங்கிலாந்து அணி.

எனவே அடுத்ததாக நடைபெறும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையாவது வெல்லும் முனைப்பில் உள்ளது இங்கிலாந்து. வரும் 23, 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகள் புனேவில் நடக்கவுள்ளது.

ஒருநாள் தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது. 

england odi squad announced for the series against india

இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியில் ஒருநாள் கிரிக்கெட்டுக்கான வழக்கமான வீரர்கள் எல்லாரும் இடம்பெற்றுள்ளனர். இங்கிலாந்தின் முக்கியமான வீரர்களான ஜோ ரூட் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகிய இருவரும் அணியில் இல்லை.

இங்கிலாந்து அணி:

ஒயின் மோர்கன்(கேப்டன்), மொயின் அலி, ஜானி பேர்ஸ்டோ, சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், சாம் கரன், டாம் கரன், லியாம் லிவிங்ஸ்டோன், மாட் பார்கின்சன், அடில் ரஷீத், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், மார்க் உட், ரீஸ் டாப்ளி.

england odi squad announced for the series against india

இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணை கேப்டன்), ஷிகர் தவான், ஷுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), சாஹல், குல்தீப் யாதவ், க்ருணல் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், நடராஜன், புவனேஷ்வர் குமார், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாகூர். 

Follow Us:
Download App:
  • android
  • ios