இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வென்றது. 

இரண்டாவது போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியிருக்க வேண்டியது. ஆனால் மழை காரணமாக நேற்று டாஸ் கூட போடப்படவில்லை. முதல் நாள் ஆட்டம் முழுவதுமாக பாதிக்கப்பட்ட நிலையில், இரண்டாம் நாளான இன்று டாஸ் போடப்பட்டது. 

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்தை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் மற்றும் பர்ன்ஸ் ஆகிய இருவரும் களமிறங்கினர். முதல் போட்டியில் சரியாக ஆடாத ராய், இந்த போட்டியிலும் சொதப்பினார். இங்கிலாந்து அணி ரன் கணக்கை தொடங்கும் முன்னரே ராயின் விக்கெட்டை இழந்துவிட்டது. ஹேசில்வுட் வீசிய இரண்டாவது ஓவரிலேயே டக் அவுட்டாகி வெளியேறினார் ராய். இதையடுத்து பர்ன்ஸுடன் கேப்டன் ரூட் ஜோடி சேர்ந்தார்.

ரூட்டும் பர்ன்ஸும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைக்க முயன்றனர். நிதானமாக ஆடி இன்னிங்ஸை பில்ட் செய்ய நினைத்தனர். ஆனால் ஹேசில்வுட் அதற்கு அனுமதிக்கவில்லை. இங்கிலாந்து கேப்டன் ரூட்டை14 ரன்களில் அவுட்டாக்கி அனுப்பினார். இதையடுத்து பர்ன்ஸுடன் ஜோ டென்லி ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார்.