வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என வென்ற இங்கிலாந்து அணி, அடுத்ததாக பாகிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது.

இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் இன்று பிற்பகல் இந்திய நேரப்படி 3.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் பர்ன்ஸ்-சிப்ளி. அதன்பின்னர் ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் இறங்குவார்கள். விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர்.  வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் அருமையாக ஆடிய ஓலி போப் கண்டிப்பாக ஆடும் லெவனில் இருப்பார். ஸ்பின்னர் டோமினிக் பெஸ். ஃபாஸ்ட் பவுலர்களாக ஆண்டர்சன் - பிராட் ஜோடியுடன் மூன்றாவது பவுலராக ஆர்ச்சர் ஆடுவார். ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டரான கிறிஸ் வோக்ஸும் ஆடும் லெவனில் இருப்பார். 

உத்தேச இங்கிலாந்து அணி:

ரோரி பர்ன்ஸ், டோமினிக் சிப்ளி, ஜோ ரூட்(கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), ஓலி போப், கிறிஸ் வோக்ஸ், டோமினிக் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

உத்தேச பாகிஸ்தான் அணி:

ஷான் மசூத், அபித் அலி, அசார் அலி, பாபர் அசாம், ஆசாத் ஷாஃபிக், முகமது ரிஸ்வான், ஷதாப் கான், யாசிர் ஷா, முகமது அப்பாஸ், ஷாஹீன் ஷா அஃப்ரிடி, நசீம் ஷா.