இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, 2-0 என தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி டி20 போட்டி நாளை நடக்கவுள்ளது. அந்த போட்டியிலும் வென்று ஆஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இங்கிலாந்து அணியும், ஆறுதல் வெற்றி பெறும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணியும் உள்ளன.

கடைசி போட்டியில் இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர் ஆடவில்லை. எனவே அவருக்கு பதிலாக சாம் கரன் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. ஜோஸ் பட்லர் அணியில் ஆடவில்லையென்றாலும், டேவிட் மாலன், டாம் பாண்ட்டன் என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு பஞ்சமில்லாமல் இருப்பதால், விக்கெட் கீப்பர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான சாம் பில்லிங்ஸ் அணியில் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. இங்கிலாந்து அணியில் அதைத்தவிர வேறு மாற்றம் எதுவும் இருக்காது.

ஆஸ்திரேலிய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனிலும் எந்த குறையும் இல்லை. எனவே அந்த அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. முதல் இரண்டு போட்டிகளில் ஆடிய அதே வீரர்களுடன் தான் களமிறங்கும். 

உத்தேச இங்கிலாந்து அணி:

ஜானி பேர்ஸ்டோ, டாம் பாண்ட்டன், டேவிட் மாலன், இயன் மோர்கன்(கேப்டன்), சாம் பில்லிங்ஸ்(விக்கெட் கீப்பர்), மொயின் அலி, கிறிஸ் ஜோர்டான், டாம் கரன், ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் உட், அடில் ரஷீத்.

உத்தேச ஆஸ்திரேலிய அணி:

ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், அஷ்டன் அகர், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்ஸன், ஆடம் ஸாம்பா.