Asianet News TamilAsianet News Tamil

முதல் இன்னிங்ஸில் சுருண்டது இங்கிலாந்து.. ஆர்ச்சரிடம் சரணடைந்த ஆஸ்திரேலிய தொடக்க ஜோடி

ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே 70 ரன்களில் பட்லரை வீழ்த்திவிட்டார் கம்மின்ஸ். கடைசி விக்கெட்டாக  ஜாக் லீச்சை மிட்செல் மார்ஷ் வீழ்த்தினார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 294 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 
 

england all out for 294 runs in first innings of ashes last test and australia lost early 2 wickets
Author
London, First Published Sep 13, 2019, 4:58 PM IST

ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்து அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. 

இந்த போட்டியில் ஜேசன் ராய் நீக்கப்பட்டதால், டென்லியும் பர்ன்ஸூம் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் இணைந்து நிதானமாக தொடங்கினர். எனினும் டென்லி நிலைக்கவில்லை. டென்லியை 14 ரன்களில் பாட் கம்மின்ஸ் வீழ்த்தினார். அதன்பின்னர் பர்ன்ஸுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ஜோ ரூட், பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தார். 

ரூட்-பர்ன்ஸ் ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்தது. 47 ரன்கள் அடித்த பர்ன்ஸ், ஹேசில்வுட்டின் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ரூட்டுடன் ஜோடி சேர்ந்த பென் ஸ்டோக்ஸ், 20 ரன்களில் மிட்செல் மார்ஷின் பந்தில் ஆட்டமிழந்தார். அரைசதம் அடித்த ரூட்டை 57 ரன்களில் கம்மின்ஸ் வீழ்த்தினார். வழக்கமாக ஹேசில்வுட்டும் கம்மின்ஸும் மட்டுமே அபாரமாக வீசி விக்கெட்டுகளை வீழ்த்தி கொண்டிருந்த நிலையில், இந்த போட்டியில் மிட்செல் மார்ஷ் அசத்தினார். 

england all out for 294 runs in first innings of ashes last test and australia lost early 2 wickets

பென் ஸ்டோக்ஸை வீழ்த்திய மிட்செல் மார்ஷ், அதன்பின்னர் பேர்ஸ்டோ, வோக்ஸ், சாம் கரன் ஆகியோரை சொற்ப ரன்களில் வெளியேற்றினார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் ஜோஸ் பட்லர் நிலைத்து நின்றதோடு, அதிரடியாக ஆடி ஸ்கோரையும் உயர்த்தினார். முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 271 ரன்களை அடித்திருந்தது. பட்லர் 64 ரன்களுடனும் ஜாக் லீச் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

இரண்டாம் நாளான இன்றைய ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே 70 ரன்களில் பட்லரை வீழ்த்திவிட்டார் கம்மின்ஸ். கடைசி விக்கெட்டாக  ஜாக் லீச்சை மிட்செல் மார்ஷ் வீழ்த்தினார். இதையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 294 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

england all out for 294 runs in first innings of ashes last test and australia lost early 2 wickets

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர் மறுபடியும் ஏமாற்றமளித்தார். ஒரு பவுண்டரியுடன் 5 ரன்கள் அடித்த வார்னரை ஆர்ச்சர் வீழ்த்தினார். 2வது ஓவரில் வார்னரை வீழ்த்திய ஆர்ச்சர், 6வது ஓவரில் மற்றொரு தொடக்க வீரரான மார்கஸ் ஹாரிஸை வீழ்த்தினார். 14 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி முதல் 2 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், லபுஷேனும் ஸ்மித்தும் ஜோடி சேர்ந்து ஆடிவருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios