அண்டர் 19 உலக கோப்பை போட்டியின்போது நில அதிர்வு உணரப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

அண்டர் 19 உலக கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே டிரினிடாட்டில் போர்ட் ஆஃப் ஸ்பெய்னில் நடந்த போட்டியின்போது நில அதிர்வு உணரப்பட்டது.

நேற்று (ஜனவரி 29) நடந்த இந்த போட்டியில் அயர்லாந்து அண்டர் 19 அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி நடந்துகொண்டிருந்தபோது ரசிகர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் அமர்ந்திருந்த கட்டிடங்கள் சில நிமிடங்கள் குலுங்கின. அதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணி வீரர்கள் ஆட்டத்தில் மும்முரமாக இருந்ததால், அவர்கள் நில அதிர்வை உணராமல் தொடர்ச்சியாக கிரிக்கெட் ஆடினர். அதனால் அந்த ஆட்டம் எந்தவிதத்திலும் பாதிக்கப்படவில்லை.

போர்ட் ஆஃப் ஸ்பெய்னில் நேற்று 5.2 என ரிக்டர் அளவில் பதிவான நில அதிர்வு, கிரிக்கெட் ஸ்டேடியத்திலும் உணரப்பட்டது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.