தல தோனியின் மனைவி சாக்ஷி கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளன.

தல தோனியின் மனைவி சாக்ஷி கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஐபிஎல் 2021ம் ஆண்டின் தொடர் நேற்று தான் நிறைவு பெற்றது. ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு தல தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியம் பட்டம் பெற்று அசத்தியது.

4வது முறையாக ஐபிஎல் சாம்பியனான சென்னை அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. தோனியின் திறமையை பார்த்தீர்களா என்று இணையத்தில் ரசிகர்கள் தெறி கமெண்ட்சை தட்டிவிட்டு வருகின்றனர்.

நேற்று ஐபிஎல் சாம்பியன், இன்று அதை விட சூப்பர் ஜாக்பாட் பரிசு தல தோனிக்கு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. நேற்று போட்டி முடிந்த பின்னர் தோனி, மனைவி சாக்ஷி, மகள் ஸிவாவுடன் போட்டோ எடுத்துக் கொண்டார்.

அவர்களுடன் மற்ற கிரிக்கெட் வீரர்களின் குடும்பத்தினரும் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். இந் நிலையில் தோனி மனைவி சாக்ஷி கர்ப்பமாக இருப்பதாகவும், அடுத்தாண்டு குழந்தை பிறக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

சமூக வலைதளங்களில் சகட்டு மேனிக்கு இது குறித்து தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் தோனியின் தரப்பில் இந்த செய்தி எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ, அறிவிப்போ வெளியாகவில்லை. ஆனாலும் உண்மை தான் என்று கூறி வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.