வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

மான்செஸ்டரில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் சீனியர் வீரரும் தலைசிறந்த விக்கெட் கீப்பருமான தோனி, மற்றுமொரு அபாரமான கேட்ச்சை பிடித்து மிரட்டினார். 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி விராட் கோலி, ராகுல் ஆகியோரின் பொறுப்பான பேட்டிங் மற்றும் ஹர்திக் பாண்டியா, தோனியின் கடைசி நேர அதிரடியால் 50 ஓவர் முடிவில் 268 ரன்களை அடித்தது. 269 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, ஷமி மற்றும் பும்ராவின் வேகத்தை சமாளிக்க முடியாமல் இந்திய அணியிடம் போராடவே இல்லாமல் சரணடைந்தனர். வெறும் 143 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 125 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது வெஸ்ட் இண்டீஸ். 

தோனி மின்னல்வேக ஸ்டம்பிங் செய்வதோ, அசாத்தியமான அபாரமான கேட்ச்களை பிடிப்பதோ புதிதல்ல. அது பார்த்து பார்த்து பழகியதுதான். எனினும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியிலும் தனது விக்கெட் கீப்பிங் திறமையை ஒரு அபாரமான கேட்ச்சின் மூலம் மீண்டும் காட்டினார். 

பும்ரா வீசிய 27வது ஓவரின் முதல் பந்து, பிராத்வெயிட்டின் பேட்டில் பட்டு விக்கெட் கீப்பர் தோனிக்கும் முதல் ஸ்லிப்பில் நின்ற ரோஹித்துக்கும் இடையே சென்றது. அதை அபாரமாக டைவ் அடித்து ஒற்றை கையில் கேட்ச் பிடித்தார் தோனி. இந்த கேட்ச் தோனியின் விக்கெட் கீப்பிங் திறனை பறைசாற்றும் மற்றுமொரு கேட்ச். அந்த கேட்ச்சை பிடித்துவிட்டு பந்தை அசால்ட்டா தூக்கி போட்டு கெத்தா நடந்து சென்றார் தோனி. அந்த வீடியோ இதோ.. 

Nissan POTD - Dhoni takes an excellent diving catch

Official ICC Cricket World Cup 2019 Website - live matches, scores, news, highlights, commentary, standings, videos and fixtures from the ICC Cricket World Cup 2019