இது டெல்லியோட கோட்டை – டாஸ் வென்று பவுலிங் – SRH ஜெயிக்க 50 சதவிகித வாய்ப்பு!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான 35ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 35ஆவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி டெல்லியில் நடக்கிறது. இதில், டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் பவுலிங் தேர்வு செய்தார்.
டெல்லி கேபிடல்ஸ்:
டேவிட் வார்னர், ஜாக் பிரேசர் மெக்கர்க், அபிஷேக் போரெல், ரிஷப் பண்ட் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்ஷர் படேல், லலித் யாதவ், குல்தீப் யாதவ், ஆண்ட்ரிச் நோர்ட்ஜே, கலீல் அகமது, முகேஷ் குமார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், எய்டன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமாத், ஷாபாஸ் அகமது, பேட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், மாயங்க் மார்க்கண்டே, டி நடராஜன்
இதற்கு முன்னதாக இரு அணிகளும் மோதிய 23 போட்டிகளில் டெல்லி 11 போட்டியிலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 12 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.