Asianet News TamilAsianet News Tamil

IPL 2021 #DCvsRR டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஒரு அதிரடி மாற்றம்..? உத்தேச ஆடும் லெவன்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் டெல்லி கேபிடள்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

delhi capitals probable playing eleven for the match against rajasthan royals in ipl 2021 uae leg
Author
Abu Dhabi - United Arab Emirates, First Published Sep 24, 2021, 10:47 PM IST

ஐபிஎல் 13வது சீசனில் முதல் முறையாக ஃபைனல் சென்ற டெல்லி கேபிடள்ஸ் அணி, முதல் முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. 

முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் 14வது சீசனிலும் ஆடிவரும் டெல்லி கேபிடள்ஸ் அணி, இந்த சீசனில் அருமையாக ஆடி புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் மாறி மாறி இருந்துவருகிறது.

ஐபிஎல் 14வது சீசனின் 2ம் பாகத்தின் முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற டெல்லி அணி, நாளைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

அந்த போட்டிக்கான டெல்லி அணியில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் நீக்கப்பட்டு ஸ்டீவ் ஸ்மித் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. இந்த மாற்றம் செய்யப்படலாம் அல்லது செய்யப்படாமலும் போகலாம். அதைத்தவிர வேறு மாற்றத்திற்கு வாய்ப்பில்லை.

உத்தேச டெல்லி கேபிடள்ஸ் அணி:

பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(கேப்டன், விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ்/ஸ்டீவ் ஸ்மித், ஷிம்ரான் ஹெட்மயர், அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், ககிசோ ரபாடா, அன்ரிச் நோர்க்யா, ஆவேஷ் கான்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios