Asianet News TamilAsianet News Tamil

#IPL2021 டெல்லி கேபிடள்ஸ் அணியின் பெஸ்ட் ஆடும் லெவன் காம்பினேஷன்

ஐபிஎல் 14வது சீசனுக்கான டெல்லி கேபிடள்ஸ் அணியின் சிறந்த ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம்.
 

delhi capitals ideal playing eleven combination for ipl 2021
Author
Chennai, First Published Apr 5, 2021, 10:05 PM IST

ஐபிஎல் 14வது சீசன் வரும் 9ம் தேதி தொடங்குகிறது. கடந்த சீசனில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் முதல் முறையாக டெல்லி கேபிடள்ஸ் அணி இறுதி போட்டிக்கு முன்னேறிய நிலையில், இந்த சீசனில் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. 

ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் தோள்பட்டையில் காயமடைந்த ஷ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல்லில் இருந்து விலகியதால், இந்த சீசனில் ரிஷப் பண்ட் கேப்டனாக இருந்து அணியை வழிநடத்தவுள்ளார்.

delhi capitals ideal playing eleven combination for ipl 2021

ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடள்ஸ் அணியில் பிரித்வி ஷா மற்றும் தவான் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக இறங்குவர். ரஹானே, ஸ்மித், ரிஷப் பண்ட் ஆகியோர் சூழலை பொறுத்து வெவ்வேறு பேட்டிங் ஆர்டரில் ஆட வாய்ப்புள்ளது. மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டராகவும், அக்ஸர் படேல் ஸ்பின் ஆல்ரவுண்டராகவும் ஆடுவார். சீனியர் ஸ்பின்னர் அஷ்வின் ஆடுவார். ஃபாஸ்ட் பவுலர்களாக ரபாடா, நோர்க்யா ஆகிய இருவருடன் உமேஷ் யாதவ் ஆடுவார்.

உத்தேச டெல்லி கேபிடள்ஸ் அணி:

பிரித்வி ஷா, ஷிகர் தவான், அஜிங்க்யா ரஹானே, ஸ்டீவ் ஸ்மித், ரிஷப் பண்ட்(கேப்டன், விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், ரபாடா, நோர்க்யா, உமேஷ் யாதவ்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios