Asianet News TamilAsianet News Tamil

IPL 2021 தம்பி நீ பண்ணதுலாம் போதும் கிளம்புப்பா; டெல்லி அணியில் ஒரு மாற்றம்! DC - KKR அணிகளின் உத்தேச ஆடும் 11

டெல்லி கேபிடள்ஸ் மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையேயான 2வது தகுதிச்சுற்று போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். 
 

delhi capitals and kkr teams probable playing eleven for the second qualifier match ipl 2021
Author
Sharjah - United Arab Emirates, First Published Oct 13, 2021, 4:06 PM IST

ஐபிஎல் 14வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. முதல் தகுதிச்சுற்று போட்டியில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி ஃபைனலுக்கு முன்னேறியது. எலிமினேட்டரில் வெற்றி பெற்ற கேகேஆர் அணியும், முதல் தகுதிச்சுற்றில் தோல்வியடைந்த டெல்லி கேபிடள்ஸும் இன்று நடக்கும் 2வது தகுதிச்சுற்று போட்டியில் மோதுகின்றன. எலிமினேட்டரில் தோற்ற ஆர்சிபி அணி தொடரை விட்டு வெளியேறியது.

கேகேஆர் - டெல்லி கேபிடள்ஸ் இடையேயான இன்றைய 2வது தகுதிச்சுற்று போட்டியில் வெற்றி பெறும் அணி, ஃபைனலில் சிஎஸ்கேவை எதிர்கொள்ளும். ஷார்ஜாவில் நடக்கும் இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஒரு மாற்றம் செய்யப்படும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிஎஸ்கேவிற்கு எதிரான முதல் தகுதிச்சுற்று போட்டியில் கடைசி ஓவரில் ரன்களை வாரிவழங்கிய டெல்லி அணி வீரர் டாம் கரனுக்கு பதிலாக, ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமீரக பாகத்தில் காயம் காரணமாக ஒரு போட்டியில் கூட ஆடாத ஸ்டோய்னிஸ், இந்த போட்டியில் ஆடுவார் என்று தெரிகிறது.

உத்தேச டெல்லி கேபிடள்ஸ் அணி:

ஷிகர் தவான், பிரித்வி ஷா, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மயர், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அக்ஸர் படேல், அஷ்வின், ரபாடா, நோர்க்யா, ஆவேஷ் கான்.

கேகேஆர் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படுவதற்கான வாய்ப்பில்லை; அதற்கான அவசியமும் இல்லை. எனவே இந்த போட்டியில் கேகேஆர் அணி அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கும்.

உத்தேச கேகேஆர் அணி:

ஷுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, ஒயின் மோர்கன்(கேப்டன்), தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), ஷகிப் அல் ஹசன், சுனில் நரைன், ஷிவம் மாவி, லாக்கி ஃபெர்குசன், வருண் சக்கரவர்த்தி.
 

Follow Us:
Download App:
  • android
  • ios