Asianet News TamilAsianet News Tamil

டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரா இந்த 11 பேரை இறக்குங்க.. வெற்றி நமதே.! முன்னாள் வீரரின் அதிரடி தேர்வு

டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார் முன்னாள் வீரர் தீப்தாஸ் குப்தா.
 

deep dasgupta picks team india playing eleven for the match against pakistan in t20 world cup
Author
Dubai - United Arab Emirates, First Published Oct 11, 2021, 3:23 PM IST

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி என்றாலே அனல் பறக்கும். இரு அணிகளும் இருதரப்பு தொடர்களில் ஆடுவதில்லை. ஐசிசி தொடர்களில் மட்டுமே இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுவதால், இரு அணிகளும் மோதும் போட்டி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஐசிசி உலக கோப்பையில் இதுவரை இந்திய அணியை ஒருமுறை கூட பாகிஸ்தான் வீழ்த்தியதேயில்லை. உலக கோப்பைகளில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்த ரெக்கார்டை தக்கவைக்கும் முனைப்பில் இந்திய அணி ஆடும் அதேவேளையில், இந்தியாவுக்கு எதிரான இந்த மோசமான ரெக்கார்டை தகர்க்கும் முனைப்பில் டி20 உலக கோப்பையில் இந்தியாவை எதிர்கொள்கிறது பாகிஸ்தான்.

டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் இரு அணிகளும் ஒரே பிரிவில் இடம்பெற்றிருக்கும் நிலையில், அந்த பிரிவில் முதல் போட்டியே இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேதான் நடக்கிறது. வரும் அக்டோபர் 24ம் தேதி துபாயில் நடக்கும் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன.

இதையும் படிங்க - #T20WorldCup இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் எந்த அணி ஜெயிக்கும்..? ஷாஹித் அஃப்ரிடி ஓபன் டாக்

இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான அந்த போட்டியில் களமிறங்குவதற்கான இந்திய அணியின் ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார் முன்னாள் வீரரும் முன்னாள் தேர்வாளருமான தீப்தாஸ் குப்தா.

தொடக்க வீரராக ரோஹித் சர்மாவுடன், ராகுல் அல்லது இஷான் கிஷனை இறக்கலாம் என்று தீப்தாஸ் குப்தா தெரிவித்துள்ளார். மிடில் ஆர்டரில் கோலி, சூர்யகுமார், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்.

ஆல்ரவுண்டர்களாக ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் ஸ்பின் ஆல்ரவுண்டர் ஜடேஜா ஆகிய இருவரையும், ஃபாஸ்ட் பவுலர்களாக ஷமி, பும்ரா ஆகிய இருவரையும், ஜடேஜாவுடன் கூடுதல் ஸ்பின்னராக வருண் சக்கரவர்த்தியையும் தேர்வு செய்துள்ளார் தீப்தாஸ் குப்தா.

தீப்தாஸ் குப்தா தேர்வு செய்த, பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி:

கேஎல் ராகுல்/இஷான் கிஷன், ரோஹித் சர்மா(துணை கேப்டன்), விராட் கோலி(கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி, பும்ரா, வருண் சக்கரவர்த்தி. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios