Asianet News TamilAsianet News Tamil

கோலி, ரோஹித் இல்லாத இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி..! முன்னாள் தேர்வாளரின் அதிரடி தேர்வு

இலங்கைக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கான தீப்தாஸ் குப்தா தேர்வு செய்துள்ள இந்திய அணியின் ஆடும் லெவனை பார்ப்போம்.
 

deep dasgupta picks team india playing eleven for t20 series against sri lanka
Author
Chennai, First Published May 19, 2021, 10:17 PM IST

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஜூன் 18-22ல் இங்கிலாந்தில் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆடிவிட்டு, அப்படியே இங்கிலாந்தில் இருந்து, இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் ஆடுகிறது.

இதற்கிடையே இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. அந்த காலக்கட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்தில் இருக்கும் என்பதால், அடுத்த லெவல் இந்திய அணி இலங்கையை எதிர்கொள்கிறது. 

வெள்ளைப்பந்து ஸ்பெஷலிஸ்ட் வீரர்களான தவான், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோருடன் சூர்யகுமார் யாதவ், பிரித்வி ஷா உள்ளிட்ட வீரர்களை கொண்ட அணி இலங்கையை எதிர்கொள்ளும். 

இந்நிலையில், இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியின் ஆடும் லெவனை இந்திய அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் தேர்வாளருமான தீப்தாஸ் குப்தா தேர்வு செய்துள்ளார். ஷிகர் தவான் மற்றும் பிரித்வி ஷா ஆகிய இருவரையும் தொடக்க வீரர்களாக தேர்வு செய்தார் தீப்தாஸ் குப்தா.

3ம் வரிசையில் சஞ்சு சாம்சன், 4ம் வரிசையில் சூர்யகுமார் யாதவ், 5ம் வரிசையில் மனீஷ் பாண்டே ஆகிய மூவரையும் தேர்வு செய்த தீப்தாஸ் குப்தா, ஆல்ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா மற்றும் ராகுல் டெவாட்டியா ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். 

ஸ்பின்னராக ராகுல் சாஹரையும், ஃபாஸ்ட் பவுலர்களாக தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், டி.நடராஜன் ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளார்.

தீப்தாஸ் குப்தா தேர்வு செய்த இலங்கை தொடருக்கான இந்திய டி20 அணி:

ஷிகர் தவான், பிரித்வி ஷா, சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, ராகுல் டெவாட்டியா, ராகுல் சாஹர், தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், டி.நடராஜன்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios