இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் டேவிட் வார்னருக்கு ஃபீல்டிங் செய்தபோது தலையில் அடிபட்டது. டி20 உலக கோப்பை நெருங்கும் நிலையில், ஆஸ்திரேலிய அணி வார்னர் விழுந்ததால் பதற்றம் அடைந்தது. ஆனால் பயப்படுவதற்கு எதுவும் இல்லை. 

டி20 உலக கோப்பை வரும் 16ம் தேதி தொடங்கி நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி20 உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவரும் நிலையில், வீரர்களின் ஃபிட்னெஸ் மிக முக்கியம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்திய அணியில் ஜஸ்ப்ரித் பும்ரா, தென்னாப்பிரிக்க அணியில் ஆல்ரவுண்டர் பிரிட்டோரியஸ் ஆகியோர் காயம் காரணமாக கடைசி நேரத்தில் டி20 உலக கோப்பையிலிருந்து விலகினர். மேலும், ஜடேஜா, ஜானி பேர்ஸ்டோ ஆகிய வீரர்கள் காயம் காரணமாக டி20 உலக கோப்பைக்கான அணியிலேயே இடம்பெறவில்லை.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பைக்கு முன் ஆஸ்திரேலியாவிற்கு மரண அடி.. 2வது டி20யிலும் ஜெயித்து டி20 தொடரை வென்றது இங்கிலாந்து

இப்படியாக பல நல்ல வீரர்கள் காயம் காரணமாக டி20 உலக கோப்பையில் ஆடமுடியாமல்போனது. இந்நிலையில், ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான 2வது டி20 போட்டியின்போது, ஃபீல்டிங் செய்யும்போது டேவிட் வார்னர் விழுந்த சம்பவம் பெரும் பதற்றத்தை அளித்தது.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையே நடந்துவரும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, இன்று கான்பெராவில் நடந்த 2வது டி20 போட்டியிலும் வெற்றி பெற்று தொடரைவென்றது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, டேவிட் மலான் (49 பந்தில் 82 ரன்கள்) மற்றும் மொயின் அலியின் (27 பந்தில்44 ரன்கள்) அதிரடியான பேட்டிங்கால் 20 ஓவரில் 178 ரன்கள் அடித்தது. 179 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 170 ரன்கள் அடித்து 8 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவ, 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 2-0 என டி20 தொடரை வென்றது.

இந்த தொடரில் இங்கிலாந்து அணியின் பேட்டிங்கின்போது, மிட்செல் ஸ்டார்க் வீசிய 15வது ஓவரின் 2வது பந்தை மொயின் அலி தூக்கியடிக்க, பவுண்டரி லைனில் அதை கேட்ச் பிடிக்க முயன்ற டேவிட் வார்னர், பின்னோக்கி ஜம்ப் செய்யும்போது கீழே விழுந்தார். அவர் விழுந்த வேகத்தில் தலை தரையில் பலமாக அடித்தது. 

இதையும் படிங்க - பும்ராவுக்கு மாற்று வீரராக ஷமி - சிராஜ் இருவரில் யாரை எடுக்கலாம்..? கவாஸ்கர் கருத்து

அவர் விழுந்த விதம், டி20 உலக கோப்பை நெருங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு பதற்றத்தையளித்தது. தலை தரையில் அடித்ததால் உடனே கன்கஷன் டெஸ்ட் செய்யப்பட்டது. ஆனால் அவருக்கு பயப்படும் வகையில் பெரிய அடி இல்லை என்பதால், 2வது இன்னிங்ஸில் பேட்டிங் ஆடினார். 

Scroll to load tweet…