இலங்கை அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதல் போட்டி அடிலெய்டில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் அதிரடியாக ஆடி சதமடித்தார். மேக்ஸ்வெல் காட்டடி அடித்து பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி 28 பந்துகளில் 62 ரன்களும் ஆரோன் ஃபின்ச் 36 பந்துகளில் 64 ரன்களும் குவித்ததை அடுத்து அந்த அணி 20 ஓவரில் 233 ரன்களை குவித்தது. 

234 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவரில் வெறும் 99 ரன்கள் மட்டுமே அடித்தது. இதையடுத்து 134 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி. 

இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாக வார்னர், பயிற்சி செய்துவிட்டு பெவிலியன் திரும்பும்போது, அங்கிருந்த சிறுவர்கள் வார்னரை பார்த்து உற்சாகமடைந்தனர். அப்போது, அவர்களில் ஒரு சிறுவருக்கு தனது க்ளௌஸை கொடுத்துவிட்டு சென்றார் வார்னர். அதனால் அந்த சிறுவர் மிகுந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்தான். அந்த சிறுவன் இதை தன் வாழ்நாளில் மறக்கவேமாட்டான். வார்னரின் செயல் அந்த சிறுவனை மட்டுமல்லாது அங்கிருந்த மற்ற சிறுவர்களையும் மகிழ்ச்சியடைய செய்தது. அந்த வீடியோ இதோ..