Asianet News TamilAsianet News Tamil

பாகிஸ்தான் முன்னாள் வீரரே ஃபீல் பண்ணும் இந்திய வீரரின் புறக்கணிப்பு..! ரோஹித் சொன்னது ஒண்ணு.. செஞ்சது ஒண்ணு

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனை எடுக்காததை பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா சாடியுள்ளார்.
 

danish kaneria disappointed with the ommission of sanju samson in india squad for t20 world cup
Author
First Published Sep 13, 2022, 5:34 PM IST

டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி20 உலக கோப்பைக்கான ரோஹித் சர்மா தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 4 வீரர்கள் ஸ்டாண்ட்பை வீரர்களாக எடுக்கப்பட்டுள்ளனர்.

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்ஸர் படேல், ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.

இதையும் படிங்க - T20 World Cup: அவங்க 2 பேருக்கு பதிலா இவங்க 2 பேர் தான் என் சாய்ஸ்! இந்திய அணி தேர்வை விமர்சிக்கும் அசாருதீன்

ஸ்டாண்ட்பை  வீரர்கள் - முகமது ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர்.

இந்திய மெயின் அணியில் முகமது ஷமி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் எடுக்கப்படாததை முன்னாள் வீரர்கள் பலர் விமர்சித்துவருகின்றனர்.

மேலும் தொடர்ச்சியாக சொதப்பிவரும் ரிஷப் பண்ட்டை எல்லாம் அணியில் எடுக்கின்றனர். ஆனால் போதுமான மற்றும் தொடர்ச்சியான வாய்ப்புகள் வழங்காமலேயே சஞ்சு சாம்சன் புறக்கணிக்கப்படுவது முன்னாள் வீரர்கள், ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ரசிகர்கள் டுவிட்டரில் தங்கள் அதிருப்தியையும் ஆத்திரத்தையும் வெளிப்படுத்தினர்.

சஞ்சு சாம்சனை எடுக்காதது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய டேனிஷ் கனேரியா, சஞ்சு சாம்சன் புறக்கணிப்பு சரியானது அல்ல. டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் அவரை எடுத்திருக்க வேண்டும். ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்களுக்கான இந்திய அணியிலும் சஞ்சு சாம்சன் புறக்கணிக்கப்பட்டுள்ளார். புறக்கணிக்கும் அளவிற்கு அவர் என்ன தவறு செய்தார் என்று தெரியவில்லை. ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக சஞ்சு சாம்சனை எடுத்திருக்கவேண்டும்.

இதையும் படிங்க - அவரை கண்டிப்பா இந்திய அணியில் எடுத்திருக்கணும்! உலக கோப்பை வின்னிங் டீமை தேர்வுசெய்த முன்னாள் தேர்வாளர் அதிரடி

பேக்ஃபூட்டில் அருமையாக ஆடுவார் சாம்சன். புல் ஷாட், கட் ஷாட், ஸ்டிரைட்டில் பவுலர்களுக்கு தலைமேல் தூக்கியடிப்பது என அனைத்துவிதமான ஷாட்டுகளையும் அருமையாக ஆடுவார். அதை நாம் ஐபிஎல்லிலேயே பார்த்திருக்கிறோம். ஆஸ்திரேலியாவில் அவரது ஷாட்டுகள் பெரியளவில் பயன்படும் என்று கேப்டன் ரோஹித் சர்மா ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால் அவரை டி20 உலக கோப்பைக்கான அணியில் எடுக்கவில்லை.
 

Follow Us:
Download App:
  • android
  • ios