Asianet News TamilAsianet News Tamil

சுழல் ஜாம்பவானை ஸ்பின் பவுலிங் கோச்சாக நியமித்தது வங்கதேச அணி

உலக கோப்பை தோல்விக்கு பிறகு அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீவ் ரோட்ஸ் நீக்கப்பட்டார். வங்கதேச அணியின் ஸ்பின் பவுலிங் பயிற்சியாளர் சுனில் ஜோஷி மற்றும் ஃபாஸ்ட் பவுலிங் பயிற்சியாளர் குர்ட்னி வால்ஷ் ஆகியோரின் பதவிக்காலம் முடிந்த நிலையில், புதிய ஸ்பின் பவுலிங் பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். 

daniel vettori appointed as spin bowling coach for bangladesh team
Author
Dhaka, First Published Jul 28, 2019, 11:15 AM IST

உலக கோப்பையில் வங்கதேச அணி சிறப்பாக ஆடியது. 3 வெற்றிகளுடன் 7 புள்ளிகளை பெற்று லீக் சுற்றுடன் வெளியேறியது. ஆனாலும் அந்த அணியின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. 

உலக கோப்பையில் குறிப்பாக ஷகிப் அல் ஹசன் அபாரமாக ஆடினர். எந்த அணிக்கு எதிராகவும் எளிதாக விட்டுக்கொடுக்கவில்லை. கடுமையாக போராடியே தோற்றனர். நன்றாக ஆடியும் அந்த அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியாதது அந்த அணியின் பார்வையில் அவர்களுக்கு பெரிய இழப்புதான்.

daniel vettori appointed as spin bowling coach for bangladesh team

உலக கோப்பை தோல்விக்கு பிறகு அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீவ் ரோட்ஸ் நீக்கப்பட்டார். வங்கதேச அணியின் ஸ்பின் பவுலிங் பயிற்சியாளர் சுனில் ஜோஷி மற்றும் ஃபாஸ்ட் பவுலிங் பயிற்சியாளர் குர்ட்னி வால்ஷ் ஆகியோரின் பதவிக்காலம் முடிந்த நிலையில், புதிய ஸ்பின் பவுலிங் பயிற்சியாளராக நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரி நியமிக்கப்பட்டுள்ளார். 

daniel vettori appointed as spin bowling coach for bangladesh team

டேனியல் வெட்டோரி, சர்வதேச அணிகளின் பயிற்சியாளராக செயல்படவில்லை என்றாலும் ஐபிஎல் உள்ளிட்ட டி20 லீக்குகளில் பயிற்சியாளராக இருந்திருக்கிறார். நியூசிலாந்து அணியின் பிரைம் ஸ்பின்னராக நீண்டகாலம் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios