Asianet News TamilAsianet News Tamil

இவருலாம் ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரரா..? ஸ்கூல் பையன் மாதிரி ஆடுறாப்ள.. ரெய்னாவை கடுமையாக விமர்சித்த ஸ்டெய்ன்

சுரேஷ் ரெய்னாவை பார்த்தால் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிய வீரரை போன்று தெரியவில்லை; ஸ்கூல் பையனை போன்று ஆடுகிறார் என்று மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார் டேல் ஸ்டெய்ன்.
 

dale steyn slams suresh raina that he looked like a school boy cricketer against mumbai indians in ipl 2021
Author
Dubai - United Arab Emirates, First Published Sep 20, 2021, 10:13 PM IST

சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னாவின் மோசமான ஃபார்ம் தொடர்ந்துவருகிறது. பொதுவாகவே ஷார்ட் பிட்ச் பந்துகளை ரெய்னா திறம்பட எதிர்கொள்ளமாட்டார். ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு திணறுவார். அதை எப்படி எதிர்கொள்வதென்ற ஐடியாவே இல்லாமல் பல நேரங்களில் ஆட்டமிழந்திருக்கிறார்.

உடம்புக்கு நேராக வீசப்படும் ஷார்ட் பிட்ச் பந்துகள் அவரது பலவீனம் என்று தெரிந்தவுடன், சர்வதேச அணிகள், அவருக்கு எதிராக ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசியே அவரை வீழ்த்த தொடங்கினர். தனது பலவீனத்தை எதிரணிகள் தெரிந்துகொண்டன என்பது தெரிந்தும் கூட, அதை அவரால் சரி செய்துகொள்ள முடியாததால் இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார் ரெய்னா.

அவரது அந்த பலவீனம் இன்னும் தொடர்ந்துகொண்டே இருப்பதுடன், அண்மைக்காலமாக ஐபிஎல்லிலும் சரியான ஃபார்மில் இல்லாமல் தொடர்ந்து சொதப்பிவருகிறார். மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் டிரெண்ட் போல்ட்டின் ஷார்ட் பிட்ச் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் திணறிய ரெய்னா, கடைசியில் அதே ஓவரிலேயே இறங்கிவந்து அடிக்க முயன்று அவுட்டும் ஆனார். லெக் திசையில் விலகி இறங்கிவந்து ஆஃப் திசையில் அவர் அடிக்க முயன்றபோது, அந்த ஷாட்டில் பேட் உடைந்து, பந்து நேராக ஃபீல்டரின் கைகளில் சிக்கியது. 

6 பந்தில் 4 ரன் மட்டுமே அடித்து ஆட்டமிழந்து வெளியேறினார் ரெய்னா. ரெய்னாவின் பேட்டிங்கை பார்த்து கடும் அதிருப்தியடைந்த டேல் ஸ்டெய்ன், அவரை மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டேல் ஸ்டெய்ன், டிரெண்ட் போல்ட் அருமையாக பந்துவீசினார். ரெய்னாவிற்கு வீசிய அந்த குறிப்பிட்ட பந்து அபாரமானது. லெக் திசையில் அதிகமான ஃபீல்டர்களை நிறுத்தியிருந்தார் போல்ட். ரெய்னா அந்த பந்தை ஆடியதை பார்த்தால், ஸ்கூல் பையன் கிரிக்கெட்டர் மாதிரி இருந்தது. ஒரு சர்வதேச வீரர் இப்படி ஆடுவதை என்னால் நம்பவே முடியவில்லை. அந்த ஷாட்டை மிக மோசமாக ஆடினார் என்று ஸ்டெய்ன் விமர்சித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios