Asianet News TamilAsianet News Tamil

#CSKvsRR நீ வெயிட்டிங்லயே இருப்பா.. உத்தேச சிஎஸ்கே அணி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் உத்தேச சிஎஸ்கே அணியை பார்ப்போம்.
 

csk probable playing eleven for the match against rajasthan royals in ipl 2021
Author
Mumbai, First Published Apr 19, 2021, 3:47 PM IST

ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

இரு அணிகளுமே இந்த சீசனின் முதல் போட்டியில் தோற்று, 2வது போட்டியில் வெற்றி பெற்று கம்பேக் கொடுத்த அணிகள். எனவே அந்த வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பிலேயே இரு அணிகளும் களமிறங்குகின்றன.

இந்த போட்டிக்கான சிஎஸ்கே அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. ஃபாஸ்ட் பவுலர் லுங்கி இங்கிடி குவாரண்டின் முடித்து சிஎஸ்கே அணியுடன் பயிற்சியில் இணைந்துவிட்டார். ஆனாலும் அவர் ஆடும் லெவனில் சேர்க்கப்பட வாய்ப்பில்லை.

தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தான் இந்த சீசனில் தடுமாறிவருகிறார். முதல் 2 போட்டிகளிலுமே படுமோசமாக ஆடினார். அந்த இடத்திற்கு ராபின் உத்தப்பா வெயிட்டிங்கில் உள்ளார். ஆனாலும் ருதுராஜ் கெய்க்வாட் நீக்கப்பட வாய்ப்பில்லை. உத்தப்பா வெயிட்டிங்கில் தான் இருந்தாக வேண்டும். போட்டியில் தோற்றாலும் அணி காம்பினேஷனை பெரும்பாலும் மாற்றமாட்டார் கேப்டன் தோனி. அப்படியிருக்கையில், கடந்த போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், அணி காம்பினேஷனை மாற்ற வாய்ப்பேயில்லை.

உத்தேச சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட், டுப்ளெசிஸ், மொயின் அலி, ரெய்னா, ராயுடு, தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), சாம் கரன், ஜடேஜா, பிராவோ, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios