Asianet News TamilAsianet News Tamil

IPL 2023: இந்த சீசனின் வலுவான RR-ஐ எதிர்கொள்ளும் CSK..! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

ஐபிஎல் 16வது சீசனில் நாளைய போட்டியில் மோதும் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

csk and rajasthan royals probable playing eleven for the match in ipl 2023
Author
First Published Apr 11, 2023, 8:52 PM IST | Last Updated Apr 11, 2023, 8:54 PM IST

ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், சிஎஸ்கே, கேகேஆர், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் சிறப்பாக ஆடி புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்திவருகின்றன. 

5 முறை சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் இந்த சீசனில் ஆடிய முதல் 2 போட்டிகளிலும் தோற்ற நிலையில், முதல் வெற்றியை பெறும் முனைப்பில் டெல்லி கேபிடள்ஸை எதிர்கொண்டு ஆடிவருகிறது மும்பை இந்தியன்ஸ் அணி. 

இந்த சீசனில் அபாரமாக ஆடிவரும் சிஎஸ்கே அணி, நாளைய போட்டியில் சென்னை சேப்பாக்கத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொள்கிறது. பேட்டிங், பவுலிங் என அனைத்துவகையிலும் வலுவான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த சீசனில் டைட்டிலை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படும் அளவிற்கு செம வலுவாக உள்ளது.

IPL 2023: ஐபிஎல்லில் கோலியின் சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்து வரலாறு படைத்த வார்னர்

சிஎஸ்கே - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில்  களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். இரு அணிகளுமே மிகச்சிறப்பாக ஆடி வெற்றிகளை பெற்றுவருவதால் இரு அணிகளின் ஆடும் லெவன் காம்பினேஷனிலுமே எந்த மாற்றமும் செய்யப்படமாட்டாது.

உத்தேச சிஎஸ்கே அணி:

டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, ட்வைன் பிரிட்டோரியஸ், தீபக் சாஹர், மிட்செல் சாண்ட்னெர், சிசாண்டா மகாளா, துஷார் தேஷ்பாண்டே.

நாங்க கொடுத்த ஐடியாவை இந்தியா ஏற்கணும்; நாங்க வேறு எதற்கும் உடன்படமாட்டோம்! PCB தலைவர் நஜாம் சேதி திட்டவட்டம்

உத்தேச ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரியான் பராக், ஷிம்ரான் ஹெட்மயர், த்ருவ் ஜுரெல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், டிரெண்ட் போல்ட், சந்தீப் ஷர்மா, யுஸ்வேந்திர சாஹல்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios