IPL 2023: முக்கியமான போட்டியில் சிஎஸ்கே - டெல்லி கேபிடள்ஸ் பலப்பரீட்சை..! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்
சிஎஸ்கே - டெல்லி கேபிடள்ஸ் இடையேயான போட்டியில் களமிறங்கும் அந்த 2 அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
ஐபிஎல் 16வது சீசன் சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ளது. லீக் சுற்றின் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்கிறது. 16 புள்ளிகளை பெற்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி இன்னும் ஒரு வெற்றி பெற்றால் பிளேஆஃபிற்கு முன்னேறிவிடும்.
13 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் இருக்கும் சிஎஸ்கே அணியும்பிளே ஆஃபில் ஒரு காலை வைத்துவிட்டாலும், இன்னும் ஒரு வெற்றியை பெறுவது பிளேஆஃப் வாய்ப்பை கண்டிப்பாக உறுதியாகிவிடும். எஞ்சிய 2 இடங்களுக்கு மும்பை, ராஜஸ்தான், ஆர்சிபி, லக்னோ அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில்,, முக்கியமான போட்டியில் சிஎஸ்கே அணி நாளை டெல்லி கேபிடள்ஸை எதிர்கொள்கிறது. கடந்த போட்டியில் வெற்றி பெற்ற உத்வேகத்தில் சிஎஸ்கேவை எதிர்கொள்கிறது டெல்லி அணி. அதேவேளையில், சிஎஸ்கே அணியும் அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்துவரும் நிலையில், அதே உத்வேகம் மற்றும் நம்பிக்கையுடன் டெல்லி கேபிடள்ஸை எதிர்கொள்கிறது.
சிஎஸ்கே அணியில் பொதுவாகவே எந்த மாற்றமும் செய்யப்படாது. எனவே சிஎஸ்கே அணி அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கும். டெல்லி கேபிடள்ஸ் அணியும் டாப் 4 வெளிநாட்டு வீரர்களுடன் இறங்கி வெற்றி கண்டதால் அந்த அணியின் காம்பினேஷனிலும் என்ஹ்ட மாற்றமும் செய்யப்படாது.
உத்தேச சிஎஸ்கே அணி:
ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயின் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, தோனி (கேப்டன்), தீபக் சாஹர், மதீஷா பதிரனா, துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்ஷனா.
IPL 2023: ஐபிஎல்லில் அபாரமான சாதனை.. வார்னர், கோலி பட்டியலில் இணைந்தார் ஷிகர் தவான்
உத்தேச டெல்லி கேபிடள்ஸ் அணி:
டேவிட் வார்னர்(கேப்டன்), ஃபிலிப் சால்ட், மிட்செல் மார்ஷ், ரைலீ ரூசோ, மனீஷ் பாண்டே, அமான் கான், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், இஷாந்த் சர்மா, கலீல் அகமது.