இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றதால் தொடர் 1-1 என சமனடைந்துள்ள நிலையில், வரும் 7ம் தேதி சிட்னியில் 3வது டெஸ்ட் தொடங்குகிறது.

3வது டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்குமே முக்கியமான போட்டி. இந்த போட்டியில் இரு அணிகளின் தொடக்க ஜோடியுமே மாறுகிறது. அந்தவகையில், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஜோடி முற்றிலுமாக மாறுகிறது. முதல் 2 போட்டிகளில் ஆடிராத டேவிட் வார்னர் மற்றும் வில் புகோவ்ஸ்கி ஆடிராத நிலையில், 3வது போட்டிக்கான அணியில் அவர்கள் இருவருமே அணியில் எடுக்கப்பட்டிருந்தாலும், ஆடும் லெவனில் யார் யார் தொடக்க வீரர்களாக ஆடுவார்கள் என்பது கேள்வியாக இருந்தது.

டேவிட் வார்னர் முழு ஃபிட்னெஸுடன் இல்லையென்றாலும், முக்கியமான போட்டி என்பதால் அவர் ஆடுவார் என்பது தெரிந்ததே. ஆனால் மேத்யூ வேட் தொடக்க வீரராக நன்றாக ஆடினார் என்பதால், வில் புகோவ்ஸ்கி நிலை குறித்த சந்தேகம் இருந்தது. 

ஆனால் டேவிட் வார்னரும் இளம் வீரரான வில் புகோவ்ஸ்கியுமே தொடக்க வீரர்களாக இறங்குவார்கள் என்பதை உணர்த்தும் விதமாக அவர்கள் இருவரும் வலையில் பேட்டிங் பயிற்சி செய்யும் வீடியோ கிரிக்கெட் ஆஸ்திரேலியா டுவிட்டரில் பகிர்ந்துள்ளது.

அந்த வீடியோவில் வார்னரும் புகோவ்ஸ்கியும், பெரிய ஷாட் மற்றும் தடுப்பாட்டம் ஆகிய இரண்டுமே அடித்து பயிற்சி செய்தனர். வார்னரும் புகோவ்ஸ்கியும் தொடக்க வீரர்களாக இறங்கினாலும் மேத்யூ வேட் அணியில் இருப்பார். ஆனால் மிடில் ஆடுவார். டிராவிஸ் ஹெட் நீக்கப்பட்டு, அவரது இடத்தில் மேத்யூ வேட் இறக்கப்பட வாய்ப்புள்ளது.