Asianet News TamilAsianet News Tamil

Kohli vs BCCI: விராட் கோலி சொன்ன அத்தனையும் பொய்யா..? மௌனம் கலைத்த தேர்வுக்குழு தலைவர் சேத்தன் ஷர்மா

விராட் கோலி ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்ட விவகாரத்தில் மௌனம் கலைத்துள்ளார் தலைமை தேர்வாளர் சேத்தன் ஷர்மா.
 

chetan sharma breaks his silence on virat kohli vs bcci issue
Author
Chennai, First Published Jan 1, 2022, 3:49 PM IST

இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகிய விராட் கோலி, ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்தும் நீக்கப்பட்டார். விராட் கோலி கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்ட விவகாரமும், அதைச்சுற்றி நடந்த சம்பவங்களும் பெரும் சர்ச்சையாக வெடித்தன.

விராட் கோலி திடீரென ஒருநாள் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்ட விதம் விமர்சனத்துக்குள்ளானது. ஒருநாள் அணியின் கேப்டனாக தொடர விரும்பிய கோலியை நீக்கியது விமர்சனத்துக்குள்ளானதால், அதுகுறித்து பேசிய பிசிசிஐ தலைவர் கங்குலி, விராட் கோலியை டி20 கேப்டன்சியிலிருந்து விலகவேண்டாம் என்று நான் தனிப்பட்ட முறையில் வலியுறுத்தினேன். ஆனால் அவர் அதை கேட்காமல் டி20 கேப்டன்சியிலிருந்து விலகிவிட்டார். வெள்ளைப்பந்து அணிகளை வெவ்வேறு கேப்டன்கள் வழிநடத்துவது சரியாக இருக்காது என்று தேர்வாளர்கள் கருதியதால், விராட் கோலி ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டதாக கங்குலி தெரிவித்திருந்தார்.

ஆனால் தென்னாப்பிரிக்காவிற்கு கிளம்புவதற்கு முன்பாக பிரஸ் மீட்டில் பேசிய விராட் கோலி, நான் டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகுவதாக கூறியபோது, அதை பிசிசிஐ தரப்பில் முழுமனதாக ஏற்றுக்கொண்டனர். கேப்டன்சியிலிருந்து விலகவேண்டாம் என்று என்னிடம் யாரும் கூறவில்லை. என்னை ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து நீக்குவதாக கடைசி நேரத்தில் தான் தெரிவித்தனரே தவிர, முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என்றார் கோலி.

பிசிசிஐ தலைவர் கங்குலியின் கருத்துக்கு கோலியின் கருத்து முற்றிலும் முரண்பாடாக இருந்ததையடுத்து, இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாகவும் விவாதப்பொருளாகவும் உருவெடுத்தது. 

இந்நிலையில், இதுகுறித்து பேசிய தேர்வுக்குழு தலைவர் சேத்தன் ஷர்மா, விராட் கோலி டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலக வேண்டாம் என்று அறிவுறுத்தினோம். அவரை யாரும் டி20 கேப்டன்சியிலிருந்து நீக்கவில்லை. அவராகத்தான் விலகினார். வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணிகளுக்கு ஒரேயொரு கேப்டன் தான் இருக்க முடியும். அதுதான் தேர்வாளர்களுக்கு அணி தேர்வு குறித்து திட்டமிட வசதியாக இருக்கும். எனவே டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகினால் ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து நீக்க நேரிடும் என்று கோலியிடம் கூறினோம். ஆனால் கோலி அதை ஏற்கவில்லை என்றூ சேத்தன் ஷர்மா கூறியுள்ளார்.

ஆனால் இப்படியான ஒரு சம்பவம் நடக்கவேயில்லை என்றும், தன்னை யாரும் கேப்டன்சியிலிருந்து விலகவேண்டாம் என அறிவுறுத்தவில்லை என்றும், ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டதை கடைசி நேரத்தில் தான் தெரியப்படுத்தியதாகவும் கோலி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios