ஐபிஎல் 13வது சீசனுக்கான ஏலம் கொல்கத்தாவில் நடந்துவருகிறது. மொத்தமாக 338 வீரர்கள் ஏலம் விடப்படுகின்றனர். 

நல்ல கோர் டீமை கொண்டுள்ள சிஎஸ்கே அணி, ஒவ்வொரு சீசனுக்கான ஏலத்திலும் பெரியளவில் செலவு செய்யாமல், குறிப்பிட்ட சில வீரர்களை மட்டுமே எடுக்கும். அதையேதான் இந்த சீசனிலும் செய்துள்ளது சிஎஸ்கே அணி.

கடந்த சீசனில் பஞ்சாப் அணியில் ஆடி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரனை ரூ.5.5 கோடிக்கு எடுத்தது. ஆஸ்திரேலியாவின் ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் நாதன் குல்ட்டர் நைலை எடுக்க சிஎஸ்கே முனைப்பு காட்டியது. ஆனால் அவரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.8 கோடிக்கு எடுத்தது. 

ஸ்பின் பவுலிங்கிற்கு சாதகமான சென்னை சேப்பாக்கத்தில் ஸ்பின் பவுலர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்பதால், சீனியர் ரிஸ்ட் ஸ்பின்னரான பியூஷ் சாவ்லாவை ரூ.6.75 கோடிக்கு சிஎஸ்கே அணி எடுத்துள்ளது. ஏற்கனவே ஹர்பஜன் சிங், ஜடேஜா, இம்ரான் தாஹிர் ஆகிய ஸ்பின்னர்கள் அணியில் இருக்கும் நிலையில், பியூஷ் சாவ்லாவையும் சிஎஸ்கே எடுத்துள்ளது. பியூஷ் சாவ்லா நிறைய ஐபிஎல் போட்டிகளில் ஆடிய அனுபவம் கொண்டவர் என்பதால் அவர் அணிக்கு பயன்படுவார் என்ற நம்பிக்கையில் அவரை கிங்ஸ் லெவன் மற்றும் கேகேஆர் ஆகிய அணிகளுடன் போட்டி போட்டு சிஎஸ்கே எடுத்துள்ளது. 

அதற்கடுத்து ஆஸ்திரேலிய அணியின் ஃபாஸ்ட் பவுலர் ஜோஷ் ஹேசில்வுட்டை ரூ.2 கோடிக்கு சிஎஸ்கே எடுத்துள்ளது.