சூப்பர்ஸ்டார் பிளேயர்; கண்டிப்பா அவர் தான் இந்திய அணிக்கு உலக கோப்பையை ஜெயித்து கொடுப்பார்! பிரெட் லீ புகழாரம்
சூர்யகுமார் யாதவ் சூப்பர்ஸ்டார் பிளேயர் என்றும், அவர் தான் இந்திய அணிக்கு டி20 உலக கோப்பையை வென்று கொடுப்பார் என்றும் பிரெட் லீ புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய அணி அரையிறுதியில் தோற்று வெளியேறியதால் உலக கோப்பைக்கான இந்திய அணியின் காத்திருப்பு தொடர்கிறது.
தோனியின் கேப்டன்சியில் 2007ல் டி20 உலக கோப்பை, 2011ல் ஒருநாள் உலக கோப்பை, 2013ல் சாம்பியன்ஸ் டிராபி என 3 விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்றது இந்திய அணி. 2013க்கு பிறகு கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக இந்திய அணி ஐசிசி கோப்பையை ஜெயிக்கவில்லை.
2015 மற்றும் 2019 ஒருநாள் உலக கோப்பைகளில் அரையிறுதியுடன் வெளியேறிய இந்திய அணி, 2014, 2016 டி20 உலக கோப்பைகளிலும் ஏமாற்றமளித்தது. 2021 டி20 உலக கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி அரையிறுதிக்குக்கூட முன்னேறவில்லை. 2022ல் ஆஸ்திரேலியாவில் நடந்த உலக கோப்பையை ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் கண்டிப்பாக இந்திய அணி ஜெயிக்கும் என நம்பப்பட்டது. ஆனால் அரையிறுதியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து வெளியேறியது இந்திய அணி.
இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் அபாரமாக பேட்டிங் ஆடி, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2 சதங்களை விளாசியதுடன், தனது அசாத்திய ஷாட்டுகளின் மூலம் அனைவரையும் கவர்ந்து இந்திய அணிக்கும் நம்பிக்கையளித்துவருகிறார். ஐசிசி டி20 ரேங்கிங்கில் முதலிடத்தில் இருக்கும் சூர்யகுமார் யாதவ், இப்போதைக்கு டி20 கிரிக்கெட்டின் சூப்பர்ஸ்டார் என அனைவராலும் புகழப்படுகிறார்.
இந்நிலையில், அவர் தான் இந்திய அணிக்கு டி20 உலக கோப்பையை வென்று கொடுப்பார் என்று பிரெட் லீ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய பிரெட் லீ, டி20 கிரிக்கெட்டின் சூப்பர்ஸ்டார் சூர்யகுமார் யாதவ். கடந்த 12-15 மாதங்களாக அசத்திவருகிறார். அவருக்கே பயமே கிடையாது. அவரது ஷாட் செலக்ஷன் செஸ் கிராண்ட்மாஸ்டர் போல் இருக்கிறது. அவர் ஆடும்போது அவரது முகத்தில் இருக்கும் சிரிப்பு விலைமதிப்பற்றது.
ஐபிஎல்லில் இருந்து ட்வைன் பிராவோ ஓய்வு..! சிஎஸ்கே அணியில் புதிய ரோல்
டி20 உலக கோப்பையில் சூர்யகுமாரின் பேட்டிங் தான் பெரிய ஹைலைட். இந்திய அணிக்கு அவர் தான் உலக கோப்பையை வென்று கொடுப்பார். அவரது பேட்டிங்கை பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும். சூர்யகுமாருக்கு எனது அறிவுரை என்னவென்றால், ஒன்றுமே கிடையாது. இப்போது ஆடுவதை போல் எப்போதுமே ஆடவேண்டும். எதையும் மாற்றக்கூடாது என்று பிரெட் லீ தெரிவித்தார்.