இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியூசிலாந்து முன்னாள் ஜாம்பவான் பிரண்டன் மெக்கல்லம் நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்து ஜோ ரூட் விலகினார். இதையடுத்து டெஸ்ட் அணியின் கேப்டனாக ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டார்.
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக தென்னாப்பிரிக்க முன்னாள் ஜாம்பவான் கேரி கிறிஸ்டனும், வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணிகளுக்கான பயிற்சியாளராக நியூசிலாந்து முன்னாள் ஜாம்பவான் பிரண்டன் மெக்கல்லமும் நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியானது.
ஆனால் இப்போது மெக்கல்லம் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகிறது. பிரண்டன் மெக்கல்லம் ஐபிஎல்லில் கேகேஆர் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்துவருகிறார்.
கேரி கிறிஸ்டனும் ஐபிஎல் அணியின் பயிற்சியாளராக இருந்துவருகிறார். ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியில் ஆடிவரும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளராக கிறிஸ்டன் இருந்துவருகிறார். இவர்கள் இருவரில் யார் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டாலும் அது நல்ல தேர்வு தான்.
கேரி கிறிஸ்டன் பயிற்சியாளர் பொறுப்பில் மெக்கல்லமை விட நல்ல அனுபவம் வாய்ந்தவர். அவரது பயிற்சியின் கீழ் தான் இந்திய அணி 2011 ஒருநாள் உலக கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. அவரது பயிற்சியில் இந்திய அணி சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டது.
