ஐசிசி பத்தாண்டின் சிறந்த டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 லெவனை தேர்வு செய்து அறிவித்தது. முன்னாள் வீரர்கள் பலரும் பத்தாண்டின் சிறந்த டெஸ்ட் லெவனை தேர்வு செய்துவருகின்றனர். அந்தவகையில், ஆஸி., அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக்கும் கடந்த பத்தாண்டின் சிறந்த டெஸ்ட் லெவனை தேர்வு செய்துள்ளார்.

இங்கிலாந்து முன்னாள் ஓபனிங் பேட்டிங் ஜாம்பவான் அலெஸ்டர் குக்கையும், மெதுவாக ஆடக்கூடிய குறைவான ஸ்டிரைக் ரேட்டை கொண்ட குக்கின் ஸ்லோ இன்னிங்ஸை ஈடுகட்டும் விதமாக மற்றொரு தொடக்க வீரராக 70 ஸ்டிரைக் ரேட்டை கொண்ட அதிரடி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் டேவிட் வார்னரையும் தேர்வு செய்துள்ளார் பிராட் ஹாக்.

3, 4 மற்றும் ஐந்தாம் வரிசைகளில் முறையே சமகாலத்தின் பெஸ்ட் பேட்ஸ்மேன்களான கேன் வில்லியம்சன், விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரை தேர்வு செய்த பிராட் ஹாக், கேன் வில்லியம்சனை கேப்டனாக தேர்வு செய்துள்ளார்.

ஆல்ரவுண்டராக தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜாம்பவான் ஆல்ரவுண்டர் ஜாக் காலிஸையும் விக்கெட் கீப்பராக ஏபி டிவில்லியர்ஸையும் தேர்வு செய்துள்ள பிராட் ஹாக், ஃபாஸ்ட் பவுலர்களாக பாட் கம்மின்ஸ், டேல் ஸ்டெய்ன், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளார். ஸ்பின்னராக பாகிஸ்தானின் யாசிர் ஷாவை தேர்வு செய்துள்ளார். பத்தாண்டில் கோலோச்சிய ஸ்பின்னர்களான அஷ்வின் மற்றும் நேதன் லயன் ஆகிய இருவரையும் புறக்கணித்துவிட்டு யாசிர் ஷாவை தேர்வு செய்துள்ளார் பிராட் ஹாக்.

பிராட் ஹாக் தேர்வு செய்த பத்தாண்டின் சிறந்த டெஸ்ட் லெவன்:

அலெஸ்டர் குக், டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன்(கேப்டன்), விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், ஜாக் காலிஸ், டிவில்லியர்ஸ்(விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், டேல் ஸ்டெய்ன், ஜேம்ஸ் ஆண்டர்சன், யாசிர் ஷா.