Asianet News TamilAsianet News Tamil

டி20 உலக கோப்பையில் களமிறங்கும் ஆஸ்திரேலிய அணியின் ஆடும் லெவன்..!

டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலிய அணியின் பலமான ஆடும் லெவன் காம்பினேஷன் எதுவென்று பிராட் ஹாக் கருத்து தெரிவித்துள்ளார்.
 

brad hogg picks australia team ideal playing eleven for t20 world cup
Author
Australia, First Published Aug 20, 2021, 3:33 PM IST

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடக்கவுள்ளது. டி20 உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன.

டி20 உலக கோப்பைக்கான நியூசிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், 15 வீரர்களை கொண்ட ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் கம்மின்ஸ், வார்னர், ஸ்மித், மேக்ஸ்வெல், ஸ்மித், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட், ஸாம்பா, அஷ்டான் அகார், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்ஸன் ஆகிய அனைவரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

பிக்பேஷ் லீக்கில் நன்றாக ஆடிய விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ஜோஷ் இங்லிஸுக்கு டி20 உலக கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைத்துள்ள நிலையில், அலெக்ஸ் கேரிக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

15 வீரர்களை கொண்ட ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், டி20 உலக கோப்பையில் களமிறங்க வேண்டிய வலுவான 11 வீரர்களை தேர்வு செய்துள்ளார் முன்னாள் ஸ்பின்னர் பிராட் ஹாக்.

ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் வார்னர், ஸ்மித், மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ், கம்மின்ஸ், அஷ்டான் அகர், ஸாம்பா, மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசில்வுட் ஆகிய வழக்கமான அனைத்து வீரர்களையும் தேர்வு செய்த பிராட் ஹாக், விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக சீனியர் வீரர் மேத்யூ வேடை தேர்வு செய்யவில்லை. இளம் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனான ஜோஷ் இங்லிஸை தேர்வு செய்துள்ளார்.

பிராட் ஹாக் தேர்வு செய்துள்ள ஆஸ்திரேலிய அணியின் ஆடும் லெவன்:

ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ், ஜோஷ் இங்லிஸ்(விக்கெட் கீப்பர்), அஷ்டான் அகர், ஆடம் ஸாம்பா, மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios