Asianet News TamilAsianet News Tamil

Asia Cup ஃபைனல்: பானுகா ராஜபக்சா அதிரடி அரைசதம்.. இலங்கை 5/58லிருந்து 6/170 ரன்கள்! பாக்.,க்கிற்கு கடின இலக்கு

ஆசிய கோப்பை ஃபைனலில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி, ராஜபக்சாவின் அதிரடி அரைசதத்தால் 20 ஓவரில் 170 ரன்களை குவித்து, 171 ரன்கள் என்ற கடின இலக்கை நிர்ணயித்துள்ளது.
 

bhanuka rajapaksa fifty helps sri lanka to set tough target to pakistan in asia  cup 2022 final
Author
First Published Sep 11, 2022, 9:38 PM IST

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை - பாகிஸ்தான் இடையேயான ஃபைனல் இன்று துபாயில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

பாகிஸ்தான் அணி:

பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், ஃபகர் ஜமான், இஃப்டிகார் அகமது, குஷ்தில் ஷா, ஆசிஃப் அலி, முகமது நவாஸ், ஷதாப் கான், ஹாரிஸ் ராஃப், நசீம் ஷா, முகமது ஹஸ்னைன்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: இந்திய அணியின் ஆடும் லெவனில் ராகுலுக்கு இடம் இல்லை..?

இலங்கை அணி:

பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), தனஞ்செயா டி சில்வா, தனுஷ்கா குணதிலகா, வனிந்து ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, மஹீஷ் தீக்‌ஷனா, பிரமோத் மதுஷன், தில்ஷான் மதுஷங்கா.

முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியின் பதும் நிசாங்கா(8), குசால் மெண்டிஸ்(0), குணதிலகா(1), கேப்டன் தசுன் ஷனாகா(2)ஆகிய நால்வரும் ஏமாற்றமளித்தனர். தனஞ்செயா டி சில்வா நன்றாக ஆடி 28 ரன்கள் அடித்த நிலையில், அவரும் கிடைத்த தொடக்கத்தை பெரிய இன்னிங்ஸாக மாற்றவில்லை. அதன்விளைவாக 8.5 ஓவரில் 58 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 

அதன்பின்னர் பானுகா ராஜபக்சாவுடன் ஜோடி சேர்ந்த ஹசரங்கா சில பெரிய ஷாட்டுகளை ஆடி ரன் வேகத்தை உயர்த்தினார். அதிரடியாக ஆடிய ஹசரங்கா 21 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 36 ரன்கள் அடித்தார். பொறுப்புடனும் அதேவேளையில் அபாரமாகவும் பேட்டிங் ஆடிய பானுகா ராஜபக்சா அரைசதம் அடித்தார். அதன்பின்னர் டெத் ஓவர்களில் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினார். கடைசி ஓவரின் கடைசி 2 பந்தில் பவுண்டரியும் சிக்ஸரும் அடித்து இன்னிங்ஸை முடித்தார்.          

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: இந்திய அணியின் நலன் கருதி அதிரடி முடிவு..! குஷியில் கோலி.. பீதியில் ராகுல்

45 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 71 ரன்களை குவித்தார் ராஜபக்சா.ராஜபக்சாவின் அதிரடி அரைசதம், ஹசரங்காவின் சிறப்பான கேமியோவால் 20 ஓவரில் 170 ரன்களை குவித்த இலங்கைஅணி, 171 ரன்கள் என்ற கடின இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்துள்ளது. ஃபைனலில் 171 ரன்கள் என்பது கடினமான இலக்கே. இலங்கையிடமும் இந்த ஸ்கோரை கட்டுப்படுத்தும் அளவிற்கான சிறந்த பவுலர்கள் உள்ளனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios