Asianet News TamilAsianet News Tamil

ENG vs SA: நங்கூரம் போட்ட ஸ்டோக்ஸ், ஃபோக்ஸ் அரைசதம்..! 2வது டெஸ்ட்டில் இங்கிலாந்து வலுவான முன்னிலை

2வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 151ரன்களுக்கு ஆல் அவுட்டாக, இங்கிலாந்து அணி 100 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்று தொடர்ந்து ஆடிவருகிறது.
 

ben stokes and ben foakes half centuries pave the way for england to strong lead against south africa in second test
Author
First Published Aug 26, 2022, 7:24 PM IST

தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகித்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடந்துவருகிறது.

2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் ஆடியது. தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேற, முதல் இன்னிங்ஸில் வெறும் 151 ரன்களுக்கு ஆல் அவுட்டானது தென்னாப்பிரிக்க அணி.

இதையும் படிங்க - ரோஹித் - டிராவிட்டின் ஸ்மார்ட்டான மூவ் இதுதான்! உலகின் தலைசிறந்த பவுலருக்கு கம்பேக் வாய்ப்பு- சக்லைன் முஷ்டாக்

தென்னாப்பிரிக்க அணியில் அதிகபட்சமாகவே டெயிலெண்டர் ககிசோ ரபாடா தான் 36 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் அனைவருமே அந்த ரன் கூட அடிக்காமல் சொற்ப ரன்களுக்கு வெளியேறினர். இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக ஆண்டர்சன் - பிராட் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் ஜாக் க்ராவ்லி 38 ரன்கள் அடித்தார். ஆலி போப் 23 ரன்களும்,சீனியர் வீரர் ஜோ ரூட் 9 ரன்களும் மட்டுமே அடித்தனர். நன்றாக ஆடிய பேர்ஸ்டோ 49 ரன்னில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட, 147 ரன்களுக்கு 5விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து அணி.

அதன்பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸ் ஆகிய இருவரும் நங்கூரம் போட்டு நிலைத்துநின்று சிறப்பாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தனர். ஸ்டோக்ஸ் - ஃபோக்ஸ் பார்ட்னர்ஷிப் அமைத்து 100 ரன்களுக்கு மேல் குவித்து ஆடிவருகின்றனர். 

இதையும் படிங்க - ஷாஹீன் அஃப்ரிடி இல்லைனா என்ன? இவங்க 3 பேரும் சேர்ந்து இந்திய வீரர்களை மிரட்டி விட்ருவாங்க - சக்லைன் முஷ்டாக்

தென்னாப்பிரிக்காவைவிட 100 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ள இங்கிலாந்து அணி வலுவான முன்னிலையுடன் தொடர்ச்சியாக பேட்டிங் ஆடிவருகிறது. அரைசதத்திற்கு பின் அதிரடியாக ஆடிவரும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சதத்தை நோக்கி ஆடிவருகிறார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios